Reserve Bank of India: நாடு முழுவதும் நிதி பரிவர்த்தனைகள் செய்யப்படும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நான்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. ஆர்பிஐ செய்துள்ள மாற்றங்கள் என்ன்ன? இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

RBI அறிவித்துள்ள முக்கிய புதுப்பிப்புகளில்


- யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) டெலிகேட்டட் பேமெண்ட்ஸின் அறிமுகம்
- காசோலை ட்ரங்கேஷன் சிஸ்டம் (சிடிஎஸ்) மூலம் விரைவான சரிபார்ப்பு
- சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் லெண்டிங் செயலிகளுக்கான பொது தரவுத்தள உருவாக்கம் மற்றும் 
- வரி செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பில் ஏற்றம் ஆகியவை அடங்கும்.


Delegated Payments: UPI பேமெண்ட்களைச் செய்ய மற்றவர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்


UPI இல் "டெலிகேட்டட் பேமெண்ட்ஸ்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த அம்சத்தின் மூலம், வங்கிக் கணக்கின் முதன்மைப் பயனர், குடும்ப உறுப்பினர் போன்ற இரண்டாம் நிலைப் பயனருக்கு, அவரது சார்பில் UPI பணம் செலுத்த அனுமதிக்க்கப்படுவார். ஒரு நபரின் வங்கிக் கணக்கிலிருந்து, அவரது குழந்தைகள், வயதான பெற்றோர் என அவரை சார்ந்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்த சர்ந்தர்ப்பங்களில் இந்த அம்சம் உதவியாக இருக்கும். 


அனைத்து பரிவர்த்தனைகளை செய்யும் போதும் இனி முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி தொடர்பான கட்டணங்களை தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்த பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளிக்கலாம். 


Cheque Truncation System: புதுப்பிக்கப்பட்ட CTS மூலம் விரைவான செக் க்ளியரன்ஸ்


செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (Cheque Truncation System) தொடர்பான அப்டேட்டும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இது மின்னணு முறையில் காசோலைகளை க்ளியர் செய்ய வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, ​​CTS ஒரு காசோலையைச் செயல்படுத்த இரண்டு நாட்கள் வரை ஆகலாம். இருப்பினும், புதிய புதுப்பிப்புகள் மூலம், காசோலைகள் சில மணி நேரங்களுக்குள் செயல்படுத்தப்படும் என ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது.


மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: OPS vs NPS... பழைய முறைக்கு மாற அவகாசம் நீட்டிக்கப்படுமா?


Digital Lending Apps: வெரிஃபை செய்யப்பட்ட டிஜிட்டல் லெண்டிங் செயலிகளுக்கான பொது தரவுத்தளம்


கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் பல மோசடி செயலிகளும் உள்ளன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நெறிமுறையற்ற செயலிகளை அதாவது டிஜிட்டல் லெண்டிங் செயலிகளை பற்றிய கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கான நடவடிக்கையாக, சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ்களுக்கான (DLAs) பொது தரவுத்தளத்தை உருவாக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுவதாக இந்த செயலிகள் கூறிக்கொண்டாலும், தரவு தனியுரிமை சிக்கல்களை எழுப்பும் நடைமுறைகளில் ஈடுபடுவது, அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பது மற்றும் கடன்களை திரும்பப் பெற நியாயமற்ற முறைகளைப் பயன்படுத்துவது ஆகிய செயல்களில் இவை ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. 


புதிய பொது தளம், RBI ஆல் ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களுடன் தொடர்புடைய DLA களை பட்டியலிடும். இதன் மூலம் கடன் வழங்கும் செயலி முறையானதா என்பதை நுகர்வோர் எளிதாக சரிபார்க்க முடியும். இந்த முன்முயற்சி, வாடிக்கையாளர்களை மோசடி அல்லது நெறிமுறையற்ற கடன் வழங்கும் நடைமுறைகளுக்கு பலியாகாமல் பாதுகாப்பதையும் டிஜிட்டல் கடன் வழங்கும் இடத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


UPI Transaction Limit for Tax Payments: வரி செலுத்துதலுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டது


UPI இயங்குதளம் எளிமையான பயன்பாட்டு முறையை கொண்டுள்ளதால், இதை மக்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த காரணத்திற்காக யுபிஐ மூலம் செய்யப்படும் வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அதிக வரி செலுத்துவோர் தங்கள் வரி செலுத்துதலுக்கு UPI ஐப் பயன்படுத்தலாம். மேலும் அவர்கள் வரி செலுத்துவதற்கான மிக வசதியான வழியாகவும் இது இருக்கும். 


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF கணக்கு விதிகளில் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ