Reserve Bank of India: பல வித பரிவர்த்தனைகளுக்காக காலோசலைகளை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. காசோலை தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
செக் க்ளியரன்சை விரைவாக செய்வதற்கான வழிமுறைகளை ஆர்பிஐ (RBI) இன்று முன்மொழிந்துள்ளது. செக் க்ளியரன்சுக்கான கால அளவை 2 வேலை நாட்களிலிருந்து சில மணிநேரங்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வியாழக்கிழமை, அதாவது இன்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணவியல் கொள்கை
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டார். இதில் பல முக்கிய விஷயங்களை பற்றிய அறிவிப்புகள் வெளியாயின. 'ஆன்-ரியலைசேஷன்-செட்டில்மென்ட்' மூலம், செக் ட்ரன்கேஷன் சிஸ்டம் (Cheque Truncation System) அதாவது CTS -இன் கீழ் காசோலைகளைத் தொடர்ந்து க்ளியர் செய்வதை கண்டின்யுயஸ் க்ளியரன்ஸ் அதாவது தொடர்ச்சியான க்ளியரன்சாக மாற்ற அவர் முன்மொழிந்தார். இதன் மூலம் செக் கிளியரன்சுக்கான நேரம் குறையும், சில மணி நேரங்களில் காசோலைகள் க்ளியர் செய்யப்படும்.
"செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) தற்போது இரண்டு வேலை நாட்கள் வரையிலான தீர்வு சுழற்சியுடன் காசோலைகளைச் க்ளியர் செய்கின்றது, அதாவது செயல்படுத்துகிறது. செக் கிளியரிங் செயல்திறனை மேம்படுத்தவும் பங்கேற்பாளர்களுக்கான செட்டில்மிமெண்ட் அபாயத்தைக் குறைக்கவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், CTS ஐ தற்போதைய நிலையான பேட்ச் பிராசசிங்கிலிருந்து, 'ஆன்-ரியலைசேஷன்-செட்டில்மென்ட்' மூலம் தொடர்ச்சியான க்ளியரிங் செய்வதற்கான அணுகுமுறை முன்மொழியப்படுகின்றது. இதன் மூலம் தற்போது இருக்கும் T+1 நாட்களிலிருந்து, க்ளியரன்ஸ் சைக்கிள் சில மணிநேரங்களாக குறைக்கப்படும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
யுபிஐ வரம்பில் மாற்றம்
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி வரி செலுத்தும் விஷயங்களுக்கான யுபிஐ வரம்பு (UPI Limit) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதிக வரிப் பொறுப்புகளைக் கொண்ட வரி செலுத்துவோர் தங்கள் நிலுவைத் தொகையை விரைவாகவும் எந்தத் தொந்தரவும் இல்லாமலும் செலுத்துவதற்கான செயல்முறையை இது எளிதாக்கும்.
ரெப்போ விகிதம்
முன்னதாக, இன்று காலை பணவியல் கொள்கை குழு மறுஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அரிவித்தார். நாணயக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர், கொள்கை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறினார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ