BSNL New Plan: இணைய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான புதிய சலுகையை குறைந்த விலையில் களம் இறக்கியிருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL).  499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் புதிய இணைய பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு, பயனர்கள் 150 ஜிபி திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஸ்.என்.எல் புதிய பிராட்பேண்ட் திட்டத்துடன் 40 ஜிபி டேட்டாவை 499 ரூபாய்க்கு வழங்குகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தில் தனது இணைய திட்டங்களில் சில மாறுதல்களையும் செய்துள்ளது. தொலைதொடர்பு ஆபரேட்டர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர் ஃபைபர் திட்டங்களுடன் பான் இந்தியா இணையத் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்திய உடனேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தொலைதொடர்பு சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு துறை (Department of Telecommunications) அனுமதிக்காக
பிஎஸ்என்எல் காத்துக் கொண்டிருக்கிறது.


Also Read | Realme X7 Max 5G அறிமுகம், விலை மற்றும் Specification அறிந்து கொள்ளுங்கள்


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய திட்டம் ரூ. 499 10 Mbps வேகத்தில் 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது; இருப்பினும், FUPக்கு பிறகு வேகம் 512 Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் புதிய இணைய பயனர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. பயனர்கள் இந்த திட்டத்தை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு அவர்கள் 150 ஜிபி தரவுத் திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.


பிஎஸ்என்எல் திருத்தப்பட்ட திட்டங்கள்


தொலைதொடர்பு ஆபரேட்டர் BSNL சில திட்டங்களில் திருத்தங்களை செய்துள்ள்ளது.  அதன்படி, முறையே 150 ஜிபி, 225 ஜிபி, 300 ஜிபி, 450 ஜிபி, 750 ஜிபி, 1200 ஜிபி மற்றும் 1500 ஜிபி தரவை வழங்குகிறது. இவை 15 Mbps, 20 Mbps, 30 Mbps, 50 Mbps, 80 Mbps மற்றும் 100 Mbps வேகத்திற்கு மாற்றப்படுகின்றன. மேலும், இந்த திட்டங்களின் FUP வரம்புகள் முறையே 512 Kbps, 1 Mbps, 2 Mbps மற்றும் 4 Mbps ஆகக் குறைக்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Also Read | SpaceX அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது ஏகபோகமாக மாறக்கூடும் - Arianespace


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR