Realme X7 Max 5G அறிமுகம், விலை மற்றும் Specification அறிந்து கொள்ளுங்கள்

ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக X7 மேக்ஸ் 5G (Realme X7 Max 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2021, 11:21 AM IST
Realme X7 Max 5G அறிமுகம், விலை மற்றும் Specification அறிந்து கொள்ளுங்கள் title=

ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி X7 மேக்ஸ் 5G (Realme X7 Max 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் இன்றுஅறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரியல்மி (Realme) நிறுவனத்தின் Realme X7 Max 5G ஸ்மார்ட்போன் (Smartphone) அடிப்படையில் மறுவடிவமைக்கப்பட்ட ரியல்மி ஜிடி நியோ ஆகும். இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.26,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.29,999 க்கும் அறிமுகமாகி உள்ளது. ஆஸ்டிராய்ட் பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் பால்வெளிமில்கி வே வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 

ALSO READ | Oppo A53 5G பம்பர் செய்தி: 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்தது விலை

Realme X7 Max 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: 
Realme X7 Max 5G இல் டூயல் சிம் (நானோ) ஆதரவு. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 இதில் உள்ளது. 6.43 இன்ச் புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 20: 9 திரை விகிதம் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் (64 மெகாபிக்சல் மெயின் சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்), 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்) இதில் உள்ளது. 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.5 லென்ஸ்) உ வருகிறது. 

256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ். 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் இதில் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம், இது பாரம்பரிய காப்பர் வேப்பர் கூலிங் முறையை விட 42 சதவீதம் அதிக வலிமையைக் கொண்டுள்ளது என்றும் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்ட குளிரூட்டும் சக்தியை வழங்குகிறது என்றும் கூறப்படுகிறது. டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு, 4,500 எம்ஏஎச் பேட்டரி, 50W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News