நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை  வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் தயாரிக்கப்படுவதால், இதற்கு முன் ஒருபோதும் இல்லாத வகையிலான பட்ஜெட்டாக இருக்கும் என   கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பட்ஜெட் உலகின் மிகப்பெரிய பட்ஜெட். நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தயாரிக்கிறது.


மத்திய பட்ஜெட் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்


பட்ஜெட் தகவல் 1: மொரார்ஜி தேசாய் பாராளுமன்றத்தில் (Parliament)  10 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.  ஒரு நிதி  அமைச்சர் தாக்கல் செய்த மிக அதிக அளவிலான பட்ஜெட் எண்ணிக்கை. அடுத்தபடியாக, ப.சிதம்பரம் ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்


பட்ஜெட் தகவல் 2: பட்ஜெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் சிறிய பை என்று பொருள்படும்  ‘bougette’ என்பதிலிருந்து உருவானது.


பட்ஜெட் தகவல் 3: முதல் இந்திய பட்ஜெட்டை ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் 1860 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார்


பட்ஜெட் தகவல் 4: சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை திரு.ஆர்.கே.சண்முகம் செட்டி  என்பவர் 1947, நவம்பர் 26,  அன்று வழங்கினார்.


பட்ஜெட் தகவல் 5: ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட் ஆகியவை 2017 வரை தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன, அதன் பிறகு அவை ஒன்றாக தாக்கல் செய்யப்பட்டன


ALSO READ | Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா
 


பட்ஜெட் தகவல் 6: 2001 இல், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​பட்ஜெட் தாக்கலை காலை 11 மணிக்கு மாற்றினார். 2000 ஆம் ஆண்டு வரை, பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது


பட்ஜெட் தகவல் 7: 2014  ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (Arun Jaitely) மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்- 2 1/2  மணி நேரம் உரை நிகழ்த்தினார்.


பட்ஜெட் தகவல் 8: 1955 வரை, மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. அந்த ஆண்டுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் அச்சிட முடிவு செய்தது.


பட்ஜெட் தகவல் 9: 2019 ஆம் ஆண்டில், சீதாராமன் பாரம்பரியமாக பட்ஜெட் ஆவணங்களை பிரீஃப்கேஸில் எடுத்து வருவதற்கு பதிலாக, ரிப்பனால் கட்டப்பட்ட தேசிய சின்னத்துடன் கூட ஒரு சிவப்பு பாக்கெட்டில் கொண்டு வந்தார்.


பட்ஜெட் தகவல்10: பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண்மணி நிதி மந்திரி இந்திரா காந்தி ஆவார். 1970 ஆம் ஆண்டு, அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR