2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி-1ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகியவற்றின் டெபாசிட் வரம்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  எஸ்சிஎஸ்எஸ்-க்கான டெபாசிட் வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிஓஎம்ஐஎஸ்க்கான டெபாசிட் வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.  பிஓஎம்ஐஎஸ்-ன் கீழ் கூட்டுக் கணக்குகளுக்கான டெபாசிட் வரம்பு ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், இனி விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் 



இந்த பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு பிரிவு 80C விலக்கு வரம்பை அதன் தற்போதைய வரம்பான ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும் என்றும், இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டால், பல சிறுசேமிப்பு திட்டங்களை வைத்திருக்கும் டெபாசிட்டாளர்கள் பயனடைவார்கள் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.  சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள், நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற பிற சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை இந்த 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் பாதிக்கவில்லை.


எஸ்சிஎஸ்எஸ் மற்றும் பிஓஎம்ஐஎஸ்-க்கான உயர்த்தப்பட்ட டெபாசிட் வரம்பு, மூத்த குடிமக்களுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு, எதிர்கால தேவைக்காக பெரியளவில் சேமிக்க உதவும்.  டெபாசிட் வரம்புகளை உயர்த்தியதன் முக்கிய காரணம் மக்களின் முதலீட்டுகளை அதிகப்படுத்துவது மற்றும் மூத்த குடிமக்களின் ஓய்வூதிய கால பாதுகாப்பிற்காகவும் தான்.  என்னதான் பட்ஜெட்டில் டெபாசிட் வரம்பு உயர்த்தப்பட்டு இருந்தாலும், வட்டி விகிதங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.  2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்குதல் முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களுக்கு ஒரு கலவையான பலனை கொடுப்பதாக அமைத்திருக்கிறது.


மேலும் படிக்க | விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ