விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்!

PM KISAN Scheme: மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் கொடுக்கப்படும் நிலையில், ரூ. 8 ஆயிரமாக உயர்வது குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2023, 09:01 PM IST
  • இத்திட்டம் 2019இல் தொடங்கப்பட்டது.
  • இதுவரை 12 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
  • ஆண்டுக்கு 3 தவணைகள் கொடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்!

PM KISAN Scheme: பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான ஆண்டு நிதிப் பலன் தொகையை 8,000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்தக்கூடும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. 8,000 ரூபாய்க்கு தகுதியுள்ள விவசாயிகளின் கணக்கில், ஆண்டுக்கு 4 சம தவணைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தன.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 இருந்து தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் தொகையை அதிகரிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, "தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை" என்று விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், இனி விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம், 2019இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய நிலத்துடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சில விலக்குகளுக்கு உட்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது ஆண்டுக்கு ரூ.6000, மூன்று மாத தவணைகளில் தலா ரூ. 2000 வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 

லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் கணக்கில் ரூ. 2,000 செலுத்துவதற்காக காத்திருக்கும் நிலையில் இத்திட்டத்திற்குத் தகுதி பெறாத பல விவசாயிகள் உள்ளனர். நடப்பு நிதியாண்டின் மூன்று தவணைகளும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த தவணை (13ஆவது தவணை) ஹோலிக்கு முன் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | SBI இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? - இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News