Budget 2023: வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு! இனி இவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை!
Budget 2023 Income Tax Changes மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமான வரி அடுக்குகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.
Budget 2023 Income Tax Changes: 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்றைய தினம் (பிப்ரவரி-1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் பலரும் பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். 2023 நிதியாண்டில் மத்திய அரசு அதன் வரவுகளை மிகைப்படுத்த தயாராக உள்ளது. இப்படி பலரும் பல எதிர்பார்ப்புகளோடு ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்களில் அரசாங்கம் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தனிநபர் வருமான வரி விதிப்பில் சில மாற்றங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் புதிய வருமான வரி வரம்பு நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை
3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை
12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15%வரி
7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி
15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி
புதிய வரி விதிப்பின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வரம்பை அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 16 நாட்கள் குறைக்கப்படுகிறது. எளிதாக ரிட்டன் தாக்கல் செய்ய புதிய வருமான வரி ரிட்டன் (ஐடிஆர்) படிவங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கூட்டுறவு சங்கங்களுக்கு 15% குறைந்த வரி விகிதத்தின் பலன் கிடைக்கும். பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ரூ.2.2 லட்சம் கோடி ரொக்கப் பரிமாற்றம் செய்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஜேபி தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | பட்ஜெட் கூட்டத்தொடரின் ஜனாதிபதி உரைக்கு ராகுல் காந்தி ஏன் வரவில்லை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ