Budget 2023: இந்த பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! முன்கூட்டியே வாங்கிடுங்க!
Budget 2023: இந்த நிதியாண்டில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2023: பிப்ரவரி 1-ம் தேதியான இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நிர்மலா சீதாராமன் இன்று ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 மத்திய பட்ஜெட், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு அளவிலான பட்ஜெட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியாகியுள்ள சில அறிக்கைகளின்படி, இந்த நிதியாண்டில் சில அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிதியாண்டில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான்
நிர்மலா சீதாராமன் இம்முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த யூனியன் பட்ஜெட் 2023-24 தாக்கல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகள் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெறும். 2023 நிதியாண்டில், கவரிங் நகைகள், குடைகள் மற்றும் இயர்போன்கள் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெறவுள்ள 2023-24 யூனியன் பட்ஜெட் தாக்கலில் எந்த பொருட்களின் விலை உயரும், எந்த பொருட்களின் விலை குறையும் என்பதை பார்க்கலாம்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்:
- ஸ்பீக்கர்கள்
- ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்
- குடை
- கவரிங் நகைகள்
- சூரிய மின்கலங்கள்
- சூரிய தொகுதிகள்
- எக்ஸ்ரே இயந்திரங்கள்
- மின்னணு பொம்மைகளின் பாகங்கள்
விலை குறையும் பொருட்கள்:
- ஆடைகள்
- மொபைல் ஃபோன் சார்ஜர்கள்
- உறைந்த மஸ்ஸல்கள்
- உறைந்த ஸ்க்விட்கள்
- கோகோ பீன்ஸ்
- மெத்தில் ஆல்கஹால்
- பளபளப்பான வைரங்கள்
மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ