Budget 2023: 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்றைய தினம் (பிப்ரவரி-1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  இந்த பட்ஜெட் தாக்கலில் பலரும் பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்.  2023 நிதியாண்டில் மத்திய அரசு அதன் வரவுகளை மிகைப்படுத்த தயாராக உள்ளது.  இப்படி பலரும் பல எதிர்பார்ப்புகளோடு ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்களில் அரசாங்கம் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவிருக்கிறது, அந்த மாற்றங்களை பற்றி பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


கிரெடிட் கார்டு:


பிப்ரவரி 1 முதல், கிரெடிட் கார்டுகளை வாடகைக்கு செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் கிடைக்காது, மேலும் காலண்டர் மாதத்தின் இரண்டாவது வாடகை பரிவர்த்தனையிலிருந்து ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.  பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற வங்கிகள் இந்த முறையை அமல்படுத்தியுள்ளது.


டாடா மோட்டார்ஸ்:


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.  ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்ளீடு செலவுகள் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.  நிறுவனம் விலை உயர்வு குறித்த சரியான விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விலை மாற்றமானது வேரியண்ட் மற்றும் மாடலைப் பொறுத்தது, மேலும் விலை அதிகரிப்பு சுமார் 1.2 சதவீதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


எல்பிஜி சிலிண்டர்:


மாதந்தோறும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது.  பிப்ரவரி 1-ம் தேதிக்கு பின்னர் சிலிண்டரின் விலை  அதிகரிக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பதை அறிய பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  2023-ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் நொய்டா பகுதியில் பெட்ரோல் என்ஜின்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய டீசல் இன்ஜின்கள் அடிப்படையிலான பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.  ஏற்கனவே போக்குவரத்துத் துறை அக்டோபர் 1, 2022 அன்று, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் இன்ஜின்களுக்கான பதிவை ரத்து செய்தது.


மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ