Budget 2024: இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீது அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோர், மூத்த குடிமக்கள், சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள் ஆகியோருக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்திய மக்களின் போக்குவரத்தில் உயிர் நாடியாக கருதப்படும் ரயில்வே துறையில் மக்கள் அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ரயில்வே துறையில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு


கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. 


புதிய ரயில்கள்


இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்களுக்கான அறிமுகமும் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, சிறு நகரங்கள், தினக்கூலி மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்கள், தொழிலில் வளர்ந்து வரும் நகரங்கள் ஆகிய இடங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைகள்


கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த சலுகை மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டது. 


- முன்னதாக, மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் பெண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க | Budget 2024: சாமானியர்களுக்கு வரி விதிப்பில் சர்ப்ரைஸ் காத்திருக்கு - நிபுணர்கள் உறுதி


- மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் ஆண்களுக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 40 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.


- இந்த தள்ளுபடி ராஜ்தானி மற்றும் சதாப்தி சேவைகள் உட்பட அனைத்து விரைவு மற்றும் மெயில் ரயில்களுக்கும் அளிக்கப்பட்டது. 


- இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி வருகிறார்கள். 


யாருக்கு பலன் கிடைக்கும்


மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை பெற விரும்பும் நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என ஊடக அறிக்கைகளில் பேசப்பட்டு வருகிறது. முன்னர் குறிப்பிடப்பட்ட வயது வரம்பை கடந்த பயணிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன்படி மூத்த குடிமக்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது முன்பதிவு படிவத்தில் அதற்கான இடத்தை நிரப்ப வேண்டும். இந்த சலுகையை மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.


மேலும் படிக்க | Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ