Important 5 Expectation In Budget 2024: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து, நரேந்திர மோடி (PM Narendra Modi) மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பொறுப்பேற்றதை அடுத்து முதன்முதலில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) தனது பட்ஜெட் உரையை தொடங்குவார்.
கடந்த இரண்டு முறையும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தது. ஆனால், இம்முறை கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் ஆட்சியமைத்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு முக்கிய கட்சிகள் இந்த கூட்டணி ஆட்சியில் முக்கிய இடம்பிடித்துள்ளன. இந்த இரு மாநிலங்களும் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கோரிக்கையை தனிப்பட்ட முறையில் முன்வைத்திருக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆந்திரா மாநிலம் சிறப்பு அந்தஸ்தை தொடர்ந்து கோரிவரும் இந்த வேளையில், தலைநகர் அமராவதியை கட்டமைப்பது உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக சந்திரபாபு நாயுடு கூடுதல் நிதியை கேட்டு பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. இதுபோக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தனித்தனியாக பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இத்தனை எதிர்பார்ப்புகள் இருந்தாலும் இந்த ஐந்து முக்கிய விஷயங்கள்தான் இந்த பட்ஜெட்டின் (Union Budget 2024) எதிர்பார்ப்புகளாக பார்க்கப்படுகிறது. அவற்றை இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
5 முக்கிய எதிர்பார்ப்புகள்
- கடந்த 10 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது, அரசு ஊழியர்கள் முதல் பல துறைகளின் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊழியர்கள் பெரிதாக ஏற்க மறுக்கின்றனர். எனவே, அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவராவிட்டாலும் கூட, குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் சில மாற்றங்களை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வர வாய்ப்புள்ளது. இது அதிருப்தியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கவர்ச்சிக்கரமான மருத்துவம் சார்ந்த திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வரம்பை அனைத்து மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கும் வழங்கும் வகையில் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்களா அல்லது இதில் ஏதாவது வயது வரம்பை மத்திய அரசு கொண்டு வருமா என்று பலரும் உற்றுநோக்கி வருகின்றனர்.
- பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில், இத்திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 'அனைவருக்கும் வீடு' என்ற மோடி அரசின் லட்சியத்தில் இது முக்கிய மைல்கல்லாக அமையவும் வாய்ப்புள்ளது.
- வரி செலுத்தும் சுமார் ஏழு கோடி மக்களும், நீண்ட காலமாக அரசிடம் இருந்து நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எனலாம். வரி செலுத்துவோர் தற்போதைய வரி அடுக்குகளில் திருப்தியாகவில்லை என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் நிலையான விலக்கு மற்றும் வரி அடுக்கில் மாற்றம் ஆகிய அறிவிப்புகள் இருக்குமான என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவில் தற்போது விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது 8 ஆயிரம் ரூபாய் அல்லது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது பிரதமர்-கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம்.
மேலும் படிக்க | Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ