Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து ஏழாவது முறையாக நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகமாகவுள்ளன.
பொருளாதார ஆய்வறிக்கை
நிதியமைச்சர் வலுவான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும், அரசின் உத்தரவாதங்கள் சாமானியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த சங்கங்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகள நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சகம் தயார் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரிச் சலுகைகள்
இந்த முறை பழைய வரி முறை, புதிய வரி முறை என இரண்டிலும் பல சலுகைகளும், விலக்குகளும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணமாக பழைய மற்றும் புதிய வரி விதிப்புகளின் கீழ் அடிப்படை விலக்கு வரம்புகளை அதிகரித்து நிதி அமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், 20 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 25 சதவீத வரியும் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
புதிய வரி முறை
- ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வரி விகிதத்தை அரசாங்கம் திருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தற்போது இது 30% ஆக உள்ளது.
- இதை 22% -25% ஆகக் குறைப்பது, இந்த வருமான வரம்பிற்குள் வரும் வரி செலுத்துவோர் மீதான வரிச் சுமையைக் குறைக்கும்.
- இது அவர்களுக்கு கணிசமான நிவாரணத்தை வழங்கும்
பழைய வரி முறை
- தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஒத்திசைக்கும் வகையில், நியாயத்தை நிலைநிறுத்த பழைய வரி விதிப்பு முறையில், வருமான வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் மாற்றம் செய்வது அவசியம்.
- அதிக வரி விகிதங்கள் பொருந்தும் வரம்புகள் மறுபரிசீலனை செய்யப்படலாம்.
- அல்லது வரிச்சுமையை சமமாக விநியோகிக்க புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தலாம்.
ஸ்டேண்டர்ட் டிடக்ஷன்
இது தவிர, புதிய வரி விதிப்பின் கீழ் கிடைக்கும் ரூ.50,000 நிலையான விலக்கு வரம்பை (Standar Deduction) ரூ.75,000 ஆக உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஊதியம் பெறும் வகுப்பினர் எந்த வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பயனடைய முடியும். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 2024 பட்ஜெட்டில் அதைச் செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ