Budget 2024: பட்ஜெட்டுக்கு முன் மூத்த குடிமக்களுக்கு நிதி அமைச்சகம் பகிர்ந்த குட் நியூஸ்
Budget 2024: 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) அதாவது எஸ்சிஎஸ்எஸ் (SCSS)-க்கான மேல் வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
Budget 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)
மத்திய பட்ஜெட் 2023-24, பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடைசி முழு அளவிலான பட்ஜெட் அறிக்கையாக இருந்தது. தற்போது பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். மக்களவை தேர்தல் (Lok Sabha Election) முடிவுகளுக்கு பிறகு அமையும் அடுத்த அரசாங்கம், ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த ஆண்டு பெரிய அறிவிப்புகள் எதுவும் எதிர்பார்க்கப்படாவிட்டாலும், கடந்த காலங்களில் என்டிஏ அரசாங்கம் வரி செலுத்துவோருக்கு சில நிவாரணங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊதியம் பெறும் நபர்களைப் போலவே, மூத்த குடிமக்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) அதாவது எஸ்சிஎஸ்எஸ் (SCSS)-க்கான மேல் வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். அதேபோல, மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (Monthly Income Plan) அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
"மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் டெபாசிட் கணக்கிற்கு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக நீட்டிக்கப்படும்" என்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட X -இல் நிதியமைச்சகம், மூத்த குடிமக்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) வைப்பு வரம்பை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியப் பலன்கள் திட்டமாகும். இது 2004 இல் தொடங்கப்பட்டது. மூத்த குடிமக்களான அனைத்து இந்திய குடிமக்களும் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்யலாம். மேலும் வழக்கமான வருமானத்தையும் அனுபவிக்கலாம். அத்துடன் இதில் வரிச் சலுகைகளும் கிடைக்கும். இந்தத் திட்டம் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் அதன் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ள SCSS கணக்கைத் திறக்கலாம்.
முன்னதாக, ஆபத்து இல்லாத, அரசு ஆதரவு பெற்ற இந்த சிறுசேமிப்பு திட்டத்தில், டெபாசிட் வரம்பு ரூ.15 லட்சமாகவும், வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.40 சதவீதமாகவும் இருந்தது. ஆண்டுக்கு 7.40 சதவீத SCSS வட்டி விகிதம் (Interest Rate), வங்கி நிலையான வைப்பு அல்லது FDகள் வழங்கும் சாதாரண வருமானத்தை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
SCSS வட்டியானது காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும், அதாவது ஒவ்வொரு நிதியாண்டிலும் 31 மார்ச், 30 ஜூன், 30 செப்டம்பர் மற்றும் 31 டிசம்பர் ஆகிய தேதிகளில் இந்த வட்டி செலுத்தப்படும். இருப்பினும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஆனால், நிதி தேவைகள் ஏற்பட்டால், முன்கூட்டியே தொகையை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1,000 ஆகும். அதே சமயம் பட்ஜெட்டில் வைப்புத்தொகை ரூ. 30 லட்சமாக மாற்றப்பட்டது. இது முன்பு ரூ.15 லட்சமாக இருந்தது.
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் 3 ஆண்டுகளுக்கு இது நீட்டிக்கப்படலாம். முதலீட்டாளர் கணக்கை மூடிவிட்டு, முன்கூட்டியே தொகையை எடுக்க விரும்பினால், கணக்குத் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் அதைச் செய்யலாம்.
மேலும் படிக்க | Fixed Deposit: அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் அற்புதமான FD அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ