Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)


நீங்களும் மத்திய அரசின் (Central Government) லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிப்ரவரி 1-ம் தேதி அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat) பல கோடி பயனாளிகளுக்கு நல்ல செய்தி வழங்கப்படலாம். 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் கவரேஜை அதிகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


Union Budget 2024: தற்போது, ​​5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி உள்ளது


தற்போது, ​​இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு (Medical Insurance) வழங்கப்படுகிறது. தற்போதுள்ள காப்பீட்டுத் தொகையை 50% வரை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு எடுக்கப்பட்ட பிறகு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம். எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. ஆயுஷ்மான் பாரத் என்பது இந்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று. யுனிவர்சல் ஹெல்த் கவரேஜுக்கான (Universal Health Coverage) தேசிய சுகாதாரக் கொள்கை-2017ன் (National Health Policy) கீழ் செப்டம்பர் 23, 2018 அன்று இது தொடங்கப்பட்டது.


மேலும் படிக்க | Budget 2024: கல்விக்கடன் வட்டி விகிதம், வரிச்சுமை குறையுமா? கல்வித்துறைக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்


25.21 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன


PMJAY 16 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்காக கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 25.21 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டுகள் (Ayushman Cards) உருவாக்கப்பட்டுள்ளன. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 30 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ், 5.68 கோடிக்கும் அதிகமான மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சுகாதாரம் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக 26,617 மருத்துவமனைகளின் நெட்வொர்க் பட்டியலிடப்பட்டுள்ளது.


ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? (How To Apply For Ayushman Bharat Scheme)


- முதலில் ஆயுஷ்மான் பாரத் வலைத்தளமான mera.pmjay.gov.in இல் லாக் இன் செய்ய வேண்டும். 


- இப்போது உங்கள் மொபைல் எண்ணையும் திரையில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிடவும்.


- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP ஐ உள்ளிடவும், அது உங்களை PMJAY உள்நுழைவுத் திரைக்கு அழைத்துச் செல்லும்.


- இப்போது நீங்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


- தகுதிக்கான அளவுகோலை எவ்வாறு சரிபார்க்க விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் (மொபைல் எண், பெயர், ரேஷன் கார்டு எண் போன்றவற்றின் மூலம்)


- உங்கள் பெயர் இங்கே தெரியும். 'குடும்ப உறுப்பினர்கள்' டேபைக் கிளிக் செய்து பயனாளியின் விவரங்களைச் சரிபார்க்கலாம்.


- இது தவிர, பட்டியலிடப்பட்ட சுகாதார பராமரிப்பு வழங்குநரைத் (EHCP) தொடர்புகொள்வதன் மூலமும் தகுதி நிலையையும் தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | 48 லட்சம் ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்... DA ஹைக், டபுள் சம்பளம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ