Budget 2024: ஜூலை 23-ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தக்கல் செய்யவுள்ளார். சம்பள வர்க்கத்தினர், தொழில்துறையினர், மத்திய அரசு ஊழியர்கள், ரியல் எஸ்டேட் துறை, சாமானியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால், பல முக்கிய அறிவிப்புகள் வெளிடப்படும் என கூறப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.


- தனிநபர் வரிகள் குறைக்கப்படும் என்று நம்பப்படுகின்றது. வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம். 


- வரி அடுக்குகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.


- அரசாங்கம் நுகர்வோர் சார்ந்த துறைகளுக்கான செலவினங்களை அதிகரிக்கும் என்ற கருத்தும் உள்ளது.


- மக்களின் வரிச்சுமை குறைந்தால், நுகர்வு அதிகரிக்கும். இதனால் ரியல் எஸ்டேட், ஹவுசிங் ஃபைனான்ஸ், உள்கட்டமைப்பு, நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல்  போன்ற தொழில்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


- சில துறைகள் இன்னும் பல காரணிகளை சார்ந்து இருப்பதால், இவை சவால்களை எதிர்கொள்ளலாம்.


- நுகர்வை அதிகரிக்க, கிராமப்புற திட்டங்களுக்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்க வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | Budget 2024: சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் ஜாக்பட்... அடிப்படை வரி விலக்கு வரம்பில் மாற்றம்?


- உள்ளூர் உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கத்தைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


- மலிவு விலை வீடுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கலாம். அரசாங்கம் புதிய மலிவு விலை வீட்டு வசதி திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்யக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


- நகர்ப்புற வீட்டுவசதிக்கான வட்டி மானியத் திட்டங்கள் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


- வீட்டு கடனுக்கான (Home Loan) வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. 


- மின்சார வாகனங்களின் (EVs) போக்கை அதிகரிக்கவும், அவற்றை ஊக்குவிக்கவும் இந்தியா ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 11,500 கோடி ரூபாய் மானியங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. EV துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த மானியங்களின் தொகை மற்றும் கால அளவு இரண்டையும் அரசாங்கம் பராமரிக்கும் என எதிர்பார்க்கின்றது.


- முதலீட்டு ஆதாய வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் அத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லை என்று கருதப்படுகின்றது.


- இவை அமல்படுத்தப்படால், அது பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மீதான வரிச் சுமையை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. 


- நீண்ட கால மூலதன ஆதாய வரியிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாட்டின் மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ