Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ்? பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
Union Budget 2025: 2025-26 பட்ஜெட் குறித்து விவசாயிகளுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதியை அதிகரிப்பதாகும்.
Union Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் 2025-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இது குறித்து இன்னும் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரவில்லை. இது விரைவில் வரும் என கூறப்படுகின்றது.
இதற்கிடையில், பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும் நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வழக்கத்தை போலவே இந்த முறையும் பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. மோடி அரசு 3.0-வின் இரண்டாவது முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
Budget 2025 Expectations: விவசாயிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு
2025-26 பட்ஜெட் குறித்து விவசாயிகளுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதியை அதிகரிப்பதாகும். பிம் கிசான் நிதியை அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டும் இருந்தது. ஆனால், அப்போது அரசாங்கம் அதை உயர்த்தவில்லை.
கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் இந்த அதிகரிப்பு பல ஆண்டுகளாகவே விவாதத்திற்குரிய விஷயமாக இருந்துள்ளது. ஆனால் இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் அறிவிப்பில் பிரதமர் கிசான் சம்மான் நிதியில் நிதி உதவியாக வழங்கப்படும் தொகையை கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.
PM Kisan: பிரதமர் கிசான் சம்மான் நிதி தொகை உயர்வு
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சமீபத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கிய பங்கு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியது. விவசாயம் மற்றும் இயற்கை வளங்களில் ஏற்படும் சீர்குலைவு பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது, இதனால் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது. விவசாயத் துறையின் சவால்களை எதிர்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தேசிய ஆணையத்தை உருவாக்க சிஐஐ முன்மொழிந்துள்ளது.
MNREGA கோரிக்கை என்ன?
MNREGA இன் குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு 267 ரூபாயில் இருந்து 375 ரூபாயாக உயர்த்துமாறு கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பல பிரச்னைகள் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தனது கோரிக்கைகளை முன்வைத்தது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் இயற்கை வளங்களைச் சார்ந்து இருப்பதாக CII வாதிட்டது.
Budget 2025: விவசாயிகளின் பிற கோரிக்கைகள் என்ன?
- வரிவிதிப்பு சீர்திருத்த திட்டங்களின் கீழ் விவசாய இயந்திரங்கள், உரங்கள், விதைகள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- PHD சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி பூச்சிக்கொல்லிகள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
- குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) பொறிமுறையை விரிவான மறுஆய்வு செய்ய வேண்டும்.
- நில வாடகை, விவசாயக் கூலி, அறுவடைக்குப் பிந்தைய செலவுகள் ஆகியவை எம்எஸ்பி கணக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும்
நிதி அமைச்சகம் இந்த அனைத்து கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யும். விவசாயிகளின் கோரிக்கைகள், முக்கியாக பிஎம் கிசான் தொகை அதிகரிப்புக்கான கோரிக்கை இந்த முறை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | FD என்னும் நிலையான வைப்புத் தொகை... புத்தாண்டில் அமலான புதிய RBI விதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ