Union Budget 2025: இன்னும் சுமார் 1 மாத காலத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். வழக்கத்தை போலவே, வரி விலக்குகளுக்கான அதிக எதிர்பார்ப்புகள் இப்போதும் உள்ளன. ஆனால், இந்த முறை பழைய வரிமுறை பற்றிய ஒரு சந்தேகமும் கூடுதலாக உள்ளது.
2024 ஆம் ஆண்டின் முழு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அரசாங்கம் தற்போதுள்ள பழைய வரி முறையை முற்றிலுமாக அகற்ற விரும்புகிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடம் பரவலாக உள்ளது. புதிய வரி முறை பரந்த வரி அடுக்குகளையும் குறைந்த விகிதங்களையும் வழங்குகிறது என்றாலும், அது வரையறுக்கப்பட்ட விலக்குகளையே வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தகது.
Old Tax Regime: பழைய வரிமுறை பற்றி நிதி அமைச்சர் கூறுவது என்ன?
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வருமான வரி முறையைச் சுற்றியுள்ள கவலைகளை எடுத்துரைத்தார். இது குறித்து அரசாங்கம் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய நோக்கம் வரி முறையை எளிமையாக்குவதுதான் என்று அவர் குறிப்பிட்டார். பழைய வரி முறையை நிறுத்துவது தொடர்பான எந்த முடிவும் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகுதான் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நம்பிக்கை அளித்தார்.
Tax Slabs: வரி அடுக்குகள்
இந்தியாவில், வருமான வரி அமைப்பு, பல்வேறு வருமான பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட மாறுபட்ட வரி விகிதங்களுடன் அடுக்கு அமைப்பில் செயல்படுகிறது. இந்த முற்போக்கான வரிவிதிப்பு முறை அதிக வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு வரிகளில் விகிதாசாரமாக அதிக பங்களிப்பை உறுதி செய்கிறது. வழக்கமாக ஒவ்வொரு பட்ஜெட் அமர்வின் போதும் இந்த வருமான வரி அடுக்குகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வரி முறையை மாற்றாமல், புதிய வரி விதிப்பில் மூன்று குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
- மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, நிதி அமைச்சர், வரி அடுக்கு விகிதங்களில் மாற்றங்களைச் செய்தார்.
- புதிய மாற்றங்களின் மூலம், ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படாது.
- ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.
- ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்.
- ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15% வரி விதிக்கப்படும்
- ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்
- ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி விதிக்கப்படும்.
Standard Deduction: நிலையான விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டது
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், புதிய வரி விதிப்பின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடைய ஒரு பணியாளரின் தேசிய ஓய்வூதிய முறைக் கணக்கில் முதலாளியின் பங்களிப்புக்கான வரம்பு அடிப்படை சம்பளத்தில் 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மூலம், புதிய வரி விதிப்பின் கீழ் தனிநபர்கள் அதிகபட்சமாக ரூ.17,500 வரிச் சேமிப்பின் பயனை அடையலாம்.
Old Tax Regime vs New Tax Regime: பழைய வரி முறை vs புதிய வரி முறை
- பழைய வரி முறை என்பது புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த வருமான வரி கணக்கீடு மற்றும் அடுக்குகளை குறிக்கிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி முறை இனி விருப்பத்தேர்வைக் குறிப்பிடாத வரி செலுத்துவோருக்கு தானாகவே பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
- பழைய வரி முறையின் கீழ், வரி விகிதங்கள் அதிகமாக உள்ளன.
- ஆனால் இதில் பல்வேறு விலக்குகள் கிடைக்கின்றன.
- வருமானத்தின் அடிப்படையில் வரி அடுக்குகள் 2.5% முதல் 30% வரை இருக்கும்.
- இருப்பினும், புதிய வரி அமைப்பில், வரி விகிதங்காள் குறைவாக உள்ளன (0% முதல் 30%).
- ஆனால் இதில் குறைவான விலக்குகளே உள்ளன.
FY25க்கான வரி அடுக்குகள்
ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறையில் உள்ள திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ், வருமான வரி அடுக்குகள் பின்வருமாறு:
- 3,00,000 வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் இல்லை
- ரூ.3,00,001 - ரூ.7,00,000: ரூ.3,00,000க்கு மேலான தொகையில் 5 சதவீதம்
- ரூ.7,00,001 - ரூ.10,00,000: ரூ.20,000 + ரூ.7,00,000க்கு மேல் உள்ள தொகையில் 10 சதவீதம்
- ரூ.10,00,001 - ரூ.12,00,000: ரூ.50,000 + ரூ.10,00,000க்கு மேல் உள்ள தொகையில் 15 சதவீதம்
- ரூ.12,00,001 - ரூ.15,00,000: ரூ.80,000 + ரூ.12,00,000க்கு மேல் உள்ள தொகையில் 20 சதவீதம்
- ரூ.15,00,000க்கு மேல் - ரூ.1,40,000 + ரூ.15,00,000க்கு மேலான தொகையில் 30 சதவீதம்
பழைய வரி முறையின் கீழ், வருமான வரி அடுக்குகள் பின்வருமாறு:
- ரூ.2,50,000 வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் இல்லை
- ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 வரை 5%
- ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை 20%
- ரூ.10,00,000க்கு மேல் 30%
மூத்த குடிமக்களுக்கு (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்)
- ரூ.3,00,000 வரை எந்த வரியும் இல்லை
- ரூ.3,00,001 முதல் ரூ.5,00,000 வரை - 5%
- ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 20%
- ரூ.10,00,000க்கு மேல் - 30%
சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு)
- ரூ.5,00,000 எந்த வரியும் இல்லை
- ரூ 5,00,001 முதல் ரூ 10,00,000 - 20%
- ரூ.10,00,000க்கு மேல் 30%
மேலும் படிக்க | PM Kisan: அதிகரிக்கும் ஒதுக்கீடு, நன்மைகள்... 19வது தவணை எப்போது கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ