Budget 2025: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மீது முக்கிய கவனம், என்ன எதிர்பார்க்கலாம்?
Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Middle Class: நடுத்தர மக்கள் மீது கவனம்
இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொருளாதாரத்தில் நகர்ப்புற நுகர்வுகளை அதிகரிக்க நிதி அமைச்சகம் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமான வரி ஸ்லாப்பில் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ரூ.3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வரி வரம்பிற்குள் வரும் வருமானத்திற்கு வெறும் 5 சதவீத வரியை உறுதி செய்வது ஒரு வழியாக இருக்கக்கூடும். வரி ஸ்லாப் அல்லது வரி விகிதத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Budget Expectations: பட்ஜெட் 2025 -இல் உள்ள முக்கிய எதிர்பார்ப்பு
இம்முறை சம்பளம் பெறும் வகுப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, புதிய வருமான வரி முறையின் (New Tax Regime) கீழ், நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது. நடப்பு நிதியாண்டில், புதிய வரி விதிப்பின் கீழ், சம்பளம் பெறும் வகுப்பினர் ரூ.75,000 நிலையான விலக்கின் பலனைப் பெறுகிறார்கள். இது தவிர, ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் புதிய வரி விதிப்பின் கீழ் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதில் மேலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய்யப்பட்டது. மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்ததை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் அது. இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நான்கு முக்கிய விஷயங்களில் நடுத்தர வர்க்கமும் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 பட்ஜெட்டில் இந்த துறைகளில் அதிக ஆர்வம் காட்டப்பட்டது.
- வேலைவாய்ப்பு (Employment)
- திறந் மேம்பாடு (Skill Development)
- எம்எஸ்எம்இ (MSME)
- நடுத்தர வர்க்கம் (Middle Class)
ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 4.1 கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவில், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அறிவித்தார்.
2024-25 பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தை இலக்காகக் கொண்ட சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்:
- பிரதமர் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் தீர்க்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
- அதில் ஐந்து ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் நிதி உதவியும் அடங்கும்.
- மலிவு விலையில் கடன்களை எளிதாக்குவதற்கு வட்டி மானியம் வழங்குவது குறித்தும் அரசாங்கம் கருதியது.
- மூலதன ஆதாய விலக்கு வரம்பை 25 சதவீதம், அதாவது ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக அரசு உயர்த்தியது.
- இருப்பினும், அனைத்து நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துகளின் நீண்ட கால ஆதாயங்களுக்கும் பொருந்தும் வகையில், புதிய வரி விகிதத்தை அரசு 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அறிவித்தது.
மேலும் படிக்க | அடிப்படை ஊதியத்துடன் இணைகிறதா 53% அகவிலைப்படி? எக்கச்சக்கமாய் எகிறப்போகும் சம்பளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ