அடிப்படை ஊதியத்துடன் இணைகிறதா 53% அகவிலைப்படி? எக்கச்சக்கமாய் எகிறப்போகும் சம்பளம்

7th Pay Commission: ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 26, 2024, 03:45 PM IST
  • சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 53% ஆக உயர்ந்துள்ளது.
  • இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைப்படுமா என்பது குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியத்துடன் இணைகிறதா 53% அகவிலைப்படி? எக்கச்சக்கமாய் எகிறப்போகும் சம்பளம் title=

7th Pay Commission: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2024 முதல் அரசாங்கம் அகவிலைப்படியை 3% அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைப்படுமா என்பது குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றன. 

Central Government Employees: அகவிலைப்படியை இணைப்பது தொடர்பான விவாதங்கள்

தற்போது அகவிலைப்படி 50% -ஐத் தாண்டி 53% ஆக உள்ளது. அகவிலைப்படி 50% என்ற நிலையை கடந்துள்ளதால், அது அடிப்படை ஊதியத்துடன் இனைக்கப்படுமா என்ற கேள்வி ஊழியர்கள் மனதில் உள்ளது. ஜனவரி 2025 -க்கு முன்னதாக அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 

DA Merger

முன்னதாக, 5வது ஊதியக் குழுவின் போது அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அகவிலைப்படியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் அமைப்பை எளிதாக்க 5வது ஊதியக்குழுவில் இது பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலா

Salary Hike: ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு

சம்பள உயர்வு: அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் DA இணைக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு பெரிய வகையில் பயனளிக்கும். இது ஊழியர்களின் சம்பள அமைப்பில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தை ஊழியர்களால் பெறப்படும் பல நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் காணலாம். ஆகையால் ஊழியர்கள் இது குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

DA Hike: அடுத்த டிஏ உயர்வு எப்போது?

அடுத்ததாக, ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், ஜனவரி 2025 -இல் அகவிலைப்படி அதிகரிக்கப்படும். இதற்கான அறிவிப்பு மார்ச் 2025 -இல் வெளியாகும் என கூறப்படுகின்றது.

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News