SSY Scheme: பெண் குழந்தைக்கு 21 வயதாகும் போது ரூ. 63 லட்சம் தரும் பம்பர் திட்டம்
Sukanya Samriddhi Yojana: பெண் குழந்தை பிறந்த உடனேயே சுகன்யா சம்ரித்தி யோகனா திட்டத்தில் ரூ.12,500 முதலீடு செய்தால் மிகச்சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: நாட்டின் பெண்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வலிமையானவர்களாகவும் மாற்றுவதற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் நோக்கம் பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதாகும். இதில் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும்.
பாதுகாப்பான சேமிப்புத் திட்டம்
இந்த திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு மற்ற சேமிப்பு திட்டங்களை விட சிறந்த வருமானத்தை அளிக்கிறது.
வட்டி அதிகரித்தது
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் வட்டி விகிதத்தை 7.60 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த வட்டி விகிதமாகும். இதன் மூலம் உறுதியான வருமானத்திற்கான வழி கிடைக்கிறது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: இந்த கணக்கை யாரெல்லாம் திறக்கலாம்
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், பெற்றோர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் கணக்கைத் திறக்கலாம். இதற்குப் பிறகு, மகளுக்கு 18 வயது வரை காத்திருக்க வேண்டும். SSY திட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளின் கணக்குகள் திறக்கப்படலாம். மறுபுறம், இரட்டை மகள்கள் இருந்தால், இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறக்கலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: கணக்கை எப்படி தொடங்குவது
பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று இந்தத் திட்டத்தைத் திறக்கலாம். அதே நேரத்தில், இந்த கணக்கை வேறு எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கும் மாற்றலாம். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும், முதிர்வு 21 ஆண்டுகளில் கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: இதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
நீங்கள் SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 7.6% வருமானம் கிடைக்கும். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் 63 லட்சத்து 79 ஆயிரத்து 6 நூற்று முப்பத்து நான்கு ரூபாய் கிடைக்கும். இதன்படி 21 வயதிற்குள் உங்கள் மகள் லட்சாதிபதி ஆகிவிடுவார்.
பெண் குழந்தை பிறந்த உடனேயே சுகன்யா சம்ரித்தி யோகனா திட்டத்தில் ரூ.12,500 முதலீடு செய்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் திறக்க என்ன செய்ய வேண்டும்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் திறக்க, ஒருவர் தபால் நிலையத்திற்குச் சென்று SSY ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
- இதற்கு மகளின் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகும். மகளின் வயது 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- பெற்றோரின் அடையாளச் சான்றும் தேவைப்படும். இதில் பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என எந்த ஆவணத்தையும் இணைக்கலாம்.
- முகவரிச் சான்றுக்கான ஆவணங்களையும் பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின் கட்டணம் அல்லது ரேஷன் கார்டு ஆகியவையும் இதில் செல்லுபடியாகும்.
- வங்கி அல்லது தபால் நிலையத்திலிருந்து உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு திறக்கப்படும்.
- சுகன்யா கணக்கு துவங்கிய பிறகு, கணக்கு வைத்திருப்பவருக்கு பாஸ்புக்கும் வழங்கப்படுகிறது.
- 2 பெண் குழந்தைகளுக்கு மேல் கணக்கு தொடங்க வேண்டும் என்றால், பிறப்புச் சான்றிதழுடன் பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Indian Railways மிகப்பெரிய அப்டேட்: மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ