பிசினஸ் ஐடியா: நீங்களும் ஒரு புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், ஒரு சிறப்பு வணிக யோசனையைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இதைத் தொடங்கினால் நல்ல வருமானம் ஈட்டலாம். இது அப்படிப்பட்ட தொழில். இதில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதன் சீசன் வணிகம் அல்ல. இதன் தேவை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். ஆம்... பழம் மற்றும் காய்கறி சிப்ஸ்களுக்கு என்றுமே டிமாண்ட் உண்டு. அதாவது உருளைக்கிழங்கு, நேந்திரம் பழம், வாழை, பீட்ரூட், சேனைக்கிழங்கு, கேரட் மற்றும் பப்பாளி சிப்ஸ் செய்யலாம். இது ஒரு சிறந்த வணிகமாகும். இதில் நீங்கள் விரைவில் பலரை வேலைக்கு அமர்த்தும் நிலைக்கு உயர்வீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்கம் மக்களை தன்னம்பிக்கையுடன் (ஆத்மநிர்பார் பாரத்) ஊக்குவிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அலுவக வேலையையுடன் கூடவே சைடு பிசிணஸாக (Business Idea) கூட இந்தத் தொழிலைத் தொடங்கலாம். சந்தையில் சிப்ஸ்களுக்கு அதிக தேவை உள்ளது. பெரிய நிறுவனங்கள் இன்னும் இந்தத் துறையில் நுழையவில்லை என்பது மிகப் முக்கிய விஷயம். எனவே, நீங்கள் எந்த விதமான போட்டியையும் சந்திக்க வேண்டியதில்லை.


பழம் மற்றும் காய்கறி சிப்ஸ் வியாபாரத்தை எப்படி தொடங்குவது?


இதற்கு, முதலில் உங்களுக்கு மூலப்பொருட்கள் தேவைப்படும். நீங்கள் எந்தப் பழங்கள் அல்லது காய்கறிகளிலிருந்து சிப்ஸ்களை தயாரிக்க இருக்கிறீர்களோ அது உங்களுக்குத் தேவைப்படும். இதனுடன் நீங்கள் மசாலாப் பொருட்களும் தேவைப்படும். உப்பு மற்றும் சமையல் எண்ணெய்கள் தேவைப்படும். சிப்ஸ்களை உருவாக்க இயந்திரங்களும் தேவைப்படும். பழங்கள் அல்லது காய்கறிகளை தோலுரித்து வேக வைத்து மெல்லிய துண்டுகளாக வெட்டுவதற்கு ஒரு இயந்திரம் நிறுவப்பட வேண்டும். மசாலாவை வறுக்கவும் கலக்கவும் ஒரு இயந்திரம் தேவைப்படும். பைகளை அச்சிடுவதற்கான இயந்திரமும் நிறுவப்பட வேண்டும். நீங்கள் வாங்க விரும்பவில்லை என்றால், நீங்கள் அதை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது வெளியில் அச்சிடலாம். இதில் நீங்கள் கடினமாக உழைத்தால், உங்கள் வணிகம் இரட்டிப்பு மற்றும் நான்கு மடங்கு வளரும்.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!


பழங்கள் மற்றும் காய்கறி சிப்ஸ்கள் மூலம் பெரிய பணம் சம்பாதிப்பது எப்படி


நீங்கள் 100 கிலோ சிப்ஸ் தயாரிக்க விரும்பினால், மூலப்பொருட்கள், மசாலா மற்றும் சமையல் எண்ணெய் மற்றும் இதர செலவுகள் உட்பட சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை செலவழிக்க வேண்டும். சில சமயம் காய்கறிகள் அல்லது மற்ற பழங்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம். சந்தையில் சிப்ஸ்களின் விலை கிலோ ரூ.150 ஆக உள்ளது. 100 கிலோ விலை ரூ.15,000 வரை கிடைக்கும். ரூ.7000 செலவுகளை நீக்கினால் ரூ.8,000 சேமிக்கப்படும்.


தோராயமான மதிப்பீட்டின்படி, தினமும் 40 கிலோ முதல் 60 கிலோ வரை சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து செலவுகளையும் செய்த பிறகு, உங்களுக்கு 70-100 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு நாளில் எளிதாக ரூ.2800 முதல் ரூ.6,000 வரை சம்பாதிக்கலாம். இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த நாட்களில் நகரங்களில் பலர் சிப்ஸ்களை வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பெரும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ