Beauty Parlour Business Idea: சொந்தமாக ஒரு தொழில் தொடங்கும் எண்ணில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல யோசனை உள்ளது. குறைந்த அளவில் முதலீடு செய்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு. இது ஒரு சுய தொழிலாகும். இந்த தொழிலை நீங்கள் வீட்டுக்கு அருகிலேயே சிறிய அளவில் தொடங்கி தொடர்ச்சியாக பெரிய அளவில் லாபத்தை பார்க்கலாம். இதில் முதலீட்டு குறைவு என்பதோடு வருமானமும் சிறப்பாக இருக்கும். அதன்படி பியூட்டி பார்லர் அல்லது சலூன் தொழில் உங்களுக்கு நல்ல வருமானத்தை தரலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த தொழிலுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனெனில் தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் முகம் அதிகரித்து வருகிறது. கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை பியூட்டி பார்லரை திறக்க தொடங்கியுள்ளன. திருமணங்கள் முதல் வேற எந்த சுப நிகழ்ச்சி ஆக இருந்தாலும் சரி பெண்கள் பார்லருக்கு செல்வது வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?


இந்த பியூட்டி பார்லர் தொழிலை தொடங்கினால் நீங்கள் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதிக்கலாம். இதற்கு வெறும் நல்ல இடம் மற்றும் லேட்டஸ்ட் கருவிகள் இருந்தாலே போதும்.


பியூட்டி பார்லர் தொழிலை தொடங்குவது எப்படி?
இந்நிலையில் நீங்கள் ஒரு பியூட்டி பார்லரை திறக்க போகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் வாடிக்கையாளர்களை கண்டறியவது மிகவும் அவசியமாகும். பின்னர் நீங்கள் சலூன் வைக்கப் போகும் இடத்தில் இருக்கும் மக்களின் பொருளாதார நிலையை கண்டறியவும். இதன்பின் உங்கள் பார்லரில் எந்த விதமான பொருட்களை நீங்கள் பயன்படுத்த போகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதனுடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த சேவையை நீங்கள் வழங்க போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சலூனுக்கான காஸ்டிங்கை முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு சலூனை தொடங்குவதற்கு முன்பு அம்மாநில அரசிடமிருந்து உரிமை பெற வேண்டும். உரிமை பெற்ற பிறகு நீங்கள் ஜிஎஸ்டி எண்ணெய் பெற வேண்டும்.


பியூட்டி பார்லர் தொடங்க அரசிடமிருந்து கடன் பெறலாம்:
இந்த தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் உங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்படும். இதில் அழகு சாதன இயந்திரங்கள், கண்ணாடிகள், சலூன் நாற்காலிகள் போன்றவைக்கு இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படும். எனவே உங்களுக்கு இந்த தொழிலை தொடங்க பணம் தேவைப்பட்டால் இனி கவலை வேண்டாம், ஏஎனில் நீங்கள் அரசிடமிருந்து எளிதாக கடனை பெறலாம். இதற்காக அரசால் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படித்தி கடனை பெற விரும்பினால், நீங்கள் வங்கிக்கு சென்று அங்கு கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் அடமானம் இல்லாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறலாம்.


(பொறுப்பு துறப்பு: பொதுவாக ஒரு தொழிலில் செய்வதற்கு முன்னர் அந்தத் துறையில் அனுபவம் கொண்டவர்கள் அல்லது அந்த தொழிலை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதன் பிறகு தொழில் தொடங்குவது நல்லது.)


மேலும் படிக்க | World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ