Business Idea: சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக, அதிக பணம் சம்பாதிக்கும் வகையில் எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்குவதற்கு நிறைய பணம் தேவை என்று எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால், குறைந்த முதலீட்டிலும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நல்ல டிமாண்ட் இருக்கும் பொருள் தொடர்பான பிஸினஸை தொடங்கினால், குறைந்த பணத்தை முதலீடு செய்து சில நாட்களில் நல்ல லாபம் ஈட்டலாம். அதில் ஒன்று தான் காகித நாப்கின் அதாவது டிஷ்யூ பேப்பர் தயார் செய்யும் தொழில். இந்தத் தொழிலைத் தொடங்க முத்ரா கடனுதவி திட்டம் மூலம் (PM Mudra Loans) மத்திய அரசும் உதவி செய்கிறது. பேப்பர் நாப்கின்கள் தயாரிக்கும் உற்பத்தி யூனிட் அமைப்பதன் மூலம் பம்பர் வருமானம் ஈட்டலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாறிவரும் இன்றைய வாழ்க்கைமுறையில், டிஷ்யூ பேப்பர் அதாவது நாப்கின்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, டிஷ்யூ பேப்பர் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் இது உணவகங்கள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் மட்டுமல்ல, வீட்டிலும் கூட சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது.


டிஷ்யூ பேப்பர் வணிகத்தில் முதலீடு செய்யும் முறை


பேப்பர் நாப்கின் அதாவது டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் யூனிட் அமைக்க வேண்டுமானால், உங்களிடம் சுமார் ரூ.3.50 லட்சம் பணம் இருந்தால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தொழில் தொடங்க கடன் உதவியைப் பெற எந்த வங்கியிலும் முத்ரா திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களிடம் ரூ.3.50 லட்சம் இருந்தால், சுமார் ரூ.3.10 லட்சம் டேர்ம் லோனாகவும், ரூ.5.30 லட்சம் வரையிலான வொர்க்கிங் கேபிடல் என்னும் வணிகத்தை நடத்துவதற்கான கடனையும் வங்கியிலிருந்து பெறுவீர்கள்.


மேலும் படிக்க | PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!


டிஷ்யூ பேப்பர் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானம்


தொழிற்சாலையில், ஒரு வருடத்தில் 1.50 லட்சம் கிலோ பேப்பர் நாப்கின்களை உற்பத்தி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்கலாம். அதாவது ஒரு வருடத்தில் சுமார் ரூ.97.50 லட்சம் விற்றுமுதல் செய்யலாம். இதில் நாப்கின் தயாரிப்பதற்கான அனைத்து செலவுகளையும் மேற்கொண்டது போக, ஆண்டுக்கு 10-12 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும். உங்கள் நாப்கின்களை விற்க ஏதேனும், பன்னாட்டு நிறுவனத்துடன் கூட நீங்கள் ஒப்பந்தம் செய்யலாம். இதன் மூலம், செலவுகள் போக, ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் வரை நிகர லாபம் ஈட்டலாம். இதன் மூலம் முழு கடனையும் படிப்படியாக திருப்பி செலுத்தலாம்.


முத்ரா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும்


தொழில் தொடங்குவதற்கான கடன் உதவியை பெற, பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் எந்த வங்கியிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், அதில் உங்கள் பெயர், முகவரி, வணிக முகவரி, கல்வி, தற்போதைய வருமானம் மற்றும் எவ்வளவு கடன் தேவை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதில் செயலாக்கக் கட்டணம் அல்லது உத்தரவாதக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கடன் தொகையை எளிதான தவணைகளில் திரும்ப செலுத்தும் வசதியும் உண்டு.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை தரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ