PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!

PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2024, 09:43 AM IST
  • PM முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான தகுதி.
  • முத்ரா திட்டம் 'சிஷு', 'கிஷோர்' மற்றும் 'தருண்' என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • முத்ரா கடன் திட்டத்தின் வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் அறிவிக்கப்படுகின்றன.
PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை! title=

PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினாலோ, அல்லது தொழிலுக்கு நிதி தேவை என்றாலோ மத்திய அரசின் பிஎம் முத்ரா யோஜனா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கடன்கள் வணிக வங்கிகள், RRB என்னு பிராந்திய ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், MFIகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களால் விநியோகிக்கப்படுகின்றன.

PM முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான தகுதி

1. தனிநபர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டபூர்வமான் நிறுவனங்கள் ஆகியவை கடன் பெற தகுதி பெற்றவை.

2. விண்ணப்பதாரர் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாதவராக இருக்கக்கூடாது, என்பதோடு, கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதற்கான வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

3. தனிப்பட்ட கடன் வாங்குபவர்கள் தங்கள் தொழிலை நடத்த தேவையான திறன்கள், நிபுணத்துவம் அல்லது அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

4. கல்வித் தகுதி என்பது திட்டமிடப்பட்ட பணியின் தன்மை மற்றும் தேவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

PM முத்ரா யோஜனா: வகைகள்

PM முத்ரா திட்டம் 'சிஷு', 'கிஷோர்' மற்றும் 'தருண்' என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஷிஷு பிரிவினர் ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவினர் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவினர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் (Loan Tips)பெறலாம்.

PM முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குபவர்கள்

கடன் வாங்குபவர்கள் முத்ரா கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுத்துறை வங்கிகள், அரசு இயக்கப்படும் கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் (MFI), தனியார் துறை வங்கிகள், பிராந்தியத் துறையைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCக்கள்), சிறு நிதி வங்கிகள் (SFBs) ஆகியவை இதில் அடங்கும்.

PM முத்ரா திட்டத்தின் வட்டி விகிதம்

பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் அறிவிக்கப்படுகின்றன. எனவே, வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடலாம்.

PM முத்ரா திட்டத்தின் செயலாக்க கட்டணம்

PM முத்ரா கடன்களுக்கான செயலாக்கக் கட்டணங்களும் கடனளிக்கும் நிதி நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பொறுத்தது. சிறிய அளவிலான கடன்களுக்கான செயல்முறைக் கட்டணங்கள் (ரூ. 50,000/- வரையிலான கடன்கள்) பெரும்பாலான வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் யூசர்களுக்கு சூப்பர் அப்டேட்! பில்லிங் தேதியை நீங்களே முடிவு செய்யலாம்

PM முத்ரா திட்டத்தில் கடனை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

முதலில், PM முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் கையொப்பம், அடையாளச் சான்று அல்லது வணிக நிறுவனங்களின் முகவரி போன்ற ஆவணங்களை கையில் வைத்திருக்கவும்.

PM முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது -

1: PM MUDRA அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.mudra.org.in/) சென்று, Udyamimitra போர்ட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.

2: முத்ரா கடனிற்கு விண்ணப்பிட்ட "Apply Now" என்பதைக் கிளிக் செய்யவும்.

3: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்: புதிய தொழில்முனைவோர், நிறுவப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சுயதொழில் செய்பவர். பின்னர் OTP எண்ணை பெர்ற விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை வழங்கவும்.

4: பதிவுசெய்தவுடன், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவலை நிரப்பவும்.

5: திட்ட யோசனைகள் போன்றவற்றில் உதவி தேவைப்பட்டால், அதற்கென இருக்கும் ஏஜென்சிகளைத் தேர்வு செய்யவும். இல்லையெனில், "Loan Application Centre" என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

6: உங்களுக்கு தேவையான கடனின் வகையைத் தேர்வு செய்யவும்: முத்ரா ஷிஷு, முத்ரா கிஷோர் அல்லது முத்ரா தருண்.

7: விண்ணப்பதாரர் அடுத்ததாக தங்களின் சரியான விவரங்களையும், அவர்களின் வணிகம் சார்ந்த தொழில் வகையையும் வழங்க வேண்டும்.

8: உரிமையாளர் தரவு, தற்போதைய வங்கி/கடன் வசதிகள், திட்டமிடப்பட்ட கடன் வசதிகள், எதிர்கால மதிப்பீடுகள் மற்றும் விருப்பமான கடன் வழங்குபவர்கள் போன்ற பிற தகவல்களை உள்ளிடவும்.

9: மேலே குறிப்பிட்டுள்ளபடி தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

10: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் விண்ணப்ப எண் உருவாக்கப்படும். உங்கள் எதிர்கால குறிப்புக்காக அதை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ. 15000ல் இருந்து ரூ. 21000 ஆக உயரும் அடிப்படை சம்பளம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News