தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?
Bank Locker Rules: உங்கள் நகைகளை வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ வைப்பது உங்கள் விருப்பம் மற்றும் தனிப்பட்ட அபாயத்தின் அளவைப் பொறுத்தது.
வங்கி லாக்கரில் நம்மால் தங்க நகைகள், முக்கியமான ஆவணங்கள் மற்றும் நம்முடைய உடமைகளை சேமித்து வைக்க முடியும். மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் பாதுகாப்பான சேமிப்பு இடம் வங்கி லாக்கர் ஆகும். ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதிகளை வாடகையின் அடிப்படையில் வழங்குகிறது. மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அனைவருக்கும் முதன்மையான முன்னுரிமையாகும். நம்முடைய வீட்டில் மதிப்புமிக்க பொருள்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நேரத்தில் வங்கியில் லாக்கர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | 10 நிமிடத்தில் பான் கார்டு ரெடி..! ஆன்லைனில் இலவசமாக பெறுவது எப்படி?
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்க நகைகளை அல்லது முக்கியமான ஆவணங்களை தங்கள் வீட்டில் கண்முன்னே வைத்திருக்க விரும்புகின்றனர். இதனால் சில சமயங்களில் வெளியூர் செல்லும் நேரத்தில் இவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது சாத்தியமான ஒன்று இல்லை. இந்த சமயத்தில் மதிப்புமிக்க ஆவணங்களை லாக்கரில் வைக்கலாமா அல்லது வீட்டின் அலமாரியில் வைக்கலாமா என்பது ஒவ்வொருவருடைய பாதுகாப்பு, வசதி மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வங்கி லாக்கரை பயன்படுத்த முடிவு செய்தால் எந்த வங்கியில் லாக்கரை எடுக்கலாம் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. சில வங்கிகள் லாக்கருக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன, மேலும் சில வங்கிகளில் லாக்கரை பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது. அதே சமயத்தில் குறிப்பிட்ட வங்கியில் லாக்கர் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு அங்கு ஏதேனும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கியின் இருப்பிடம், செயல்படும் நேரம் மற்றும் லாக்கர் வாடகை கட்டணங்கள் போன்ற காரணிகளை பார்ப்பது நல்லது. ஒரு வங்கி லாக்கரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
லாக்கர் கிடைக்கும் தன்மை, வாடகைக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்ள வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். பிறகு குறிப்பிட்ட வங்கியில் லாக்கரை பெற, தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, வாடகை கட்டணங்களை செலுத்த வேண்டும். வங்கியில் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுத்தவுடன், அந்த குறிப்பிட்ட வங்கியானது இரண்டு சாவிகளை உங்களுக்கு வழங்குகிறது. ஒரு சாவி உங்களிடம் மற்றொன்று வங்கியிடமும் இருக்கும். உங்கள் லாக்கரை திறக்க அந்த இரண்டு சாவிகளும் கட்டாயம் தேவைப்படும். ஆர்பிஐவிதிமுறைகளின்படி உங்கள் உடமைகள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய, ஏதேனும் கேள்விகள் இருந்தால் வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
வங்கி லாக்கரில் என்ன என்ன பொருட்களை வைக்கலாம்?
விலைமதிப்பற்ற நகைகள், சொத்து ஆவணங்கள், காப்பீட்டுக் கொள்கைகள், உயில்கள் மற்றும் சட்ட ஒப்பந்தங்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளின்படி, வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீ, திருட்டு, வழிப்பறி, கொள்ளை மற்றும் கட்டிட இடிபாடுகள் போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது வங்கிகளின் கடமையாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ