10 நிமிடத்தில் பான் கார்டு ரெடி..! ஆன்லைனில் இலவசமாக பெறுவது எப்படி?

வெறும் 10 நிமிடங்களில் உங்கள் பான் கார்டை வீட்டிலேயே உருவாக்கி, அதனை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

 

1 /6

உங்களுக்கு உடனடியாக பான் கார்டு தேவைப்பட்டால், கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே உங்கள் இ-பான் எண்ணை உருவாக்கலாம். இது முற்றிலும் இலவசம். இதற்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.  

2 /6

பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும், சில காரணங்களால் நீங்கள் புதிய பான் கார்டைப் பெற வேண்டும் என்றால், அதை வெறும் 10 நிமிடங்களில் பெற்றுக் கொள்ளலாம். பான் கார்டுக்காக பல நாட்கள் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இதற்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.  

3 /6

முதலில், உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதற்குப் பிறகு கீழே இடதுபுறத்தில் தெரியும் e-PAN விருப்பத்தை கிளிக் செய்யவும்.   

4 /6

ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் புதிய e-PAN ஐப் பெறு என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது நீங்கள் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் டிக் கொடுத்து உறுதி கொடுக்கவும்.   

5 /6

இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து, பெறப்பட்ட OTP -ஐ கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் உள்ளிடவும். இப்போது மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு பான் கார்டுக்கு கேட்கப்பட்ட மீதமுள்ள தகவல்களை நிரப்பவும்.  

6 /6

இந்த படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, சிறிது நேரத்தில் பான் எண்ணைப் பெறுவீர்கள். வழக்கமான பான் எண்ணைப் பயன்படுத்துவதைப் போலவே இ-பான் எண்ணையும் பயன்படுத்தலாம். e-PAN ஐ உருவாக்கிய பிறகு, இணையதளத்தில் உள்ள 'செக் ஸ்டேட்டஸ்/டவுன்லோட் பான்' என்பதைக் கிளிக் செய்து, PDF கோப்பாக e-PAN பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.