மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் என்று அடுக்கடுக்காக பல மகிழ்ச்சியான செய்திகள் வரவிருக்கிறது.  இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது நடக்குமானால் செப்டம்பர் 1, 2022 முதல் 52 லட்சம் ஊழியர்கள் ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பினால் பல பலன்களை பெறுவார்கள்.  ஆனால், அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஃபிட்மென்ட் பேக்டர் தான் மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அப்படி இருக்கையில் இது உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2017-ம் ஆண்டு தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.7000ஆக இருந்தது நாளடைவில் மாதம் ரூ.18000 ஆக உயர்ந்தது.  இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.8000 ஆக இருக்கும்.  7வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளில், ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமல்ல, அவ்வப்போது அரசு மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.  ஊழியர்கள் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஊதிய நிலை-1 இல் அடிப்படை சம்பளம் ரூ. 18000, ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால் அது ரூ.26000 ஆக இருக்கலாம்.



மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்!


7வது ஊதியக் குழுவுக்குப் பிறகு 8வது ஊதியக் குழு வராது என்று சில செய்திகள் வெளியாகி வருகிறது. தனியார் ஊழியர்களுக்கு எப்படி திறனுக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறதோ அதேப்போன்று அரசு ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நினைத்து வருகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளம் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப அதிகரிக்கும்.  ஊதிய நிலை மேட்ரிக்ஸ் 1 முதல் 5 வரை உள்ள மத்திய ஊழியர் அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 வரை இருக்கலாம்.  7வது ஊதியக் குழுவின் கீழ், புதிய ஊதிய விகிதத்தில், சம்பளம் பே மேட்ரிக்ஸின் அடிப்படையில் செய்யப்படுகிறது மற்றும் பே மேட்ரிக்ஸ் ஃபிட்மென்ட் பேக்டருடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் 2.57 மடங்கு பொருத்துதல் காரணி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. 



6வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதிய அளவு ரூ.7,000 ஆக இருந்தது, ஃபிட்மென்ட் பேக்டர் 1.86 மடங்கு மற்றும் 54% அதிகரித்தது.  7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 மடங்கு மற்றும் 14.29% அதிகரிப்புடன் குறைந்தபட்ச ஊதிய அளவு ரூ.18,000ஐ எட்டியது.  இப்போது ஃபிட்மென்ட் பேக்டர் 3.68 மடங்கு என்றால் குறைந்தபட்ச ஊதியம் 26,000 ஆக இருக்கும்.  உதாரணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 லாபமாக இருக்கும்.  ஆனால் சம்பளம் ரூ 95,680 (26000 X 3.68 = 95,680) அதாவது ரூ 49,420 சம்பளத்தில் பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | Credit Card: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா? புதிய விதி இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ