10 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதில் புதிய சம்பள கமிஷன் பற்றி இப்போது எதுவும் யோசிக்கவில்லை என்பதை மத்திய அரசு ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. ராஜ்யசபா கூட்டத்தில் 8வது ஊதிய குழு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது நிதி அமைச்சகம் சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய குழு அமைப்பது பற்றி தீர்மானிக்க இப்போது அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த புதிய ஊதிய குழுவை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் சிலர் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்துள்ளனர், ஆனால் அதை இப்போதைக்கு செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயருமா...? வந்தது பெரிய அப்டேட்


கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பட்ஜெட் திட்டத்தை தாக்கல் செய்தார். இந்நிலையில் புதிய பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில் 8வது ஊதிய குழு தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஊழியர்களுக்கு மட்டும் இன்றி ஓய்வூதியகாரர்களுக்கும் இந்த புதிய ஊதிய குழு உதவிகரமாக இருக்கும். அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுவார்கள், அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஊதிய குழு தான் முடிவு செய்யும்.


கடைசியாக 7வது ஊதியக் குழு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. எனவே அடுத்தது 2025ல் புதிய ஊதிய குழுவை அரசு அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஊதிய குழுவிற்கு 10 ஆண்டுகள் இடைவெளியை அரசு பின்பற்றுகிறது. அதன்படி விரைவில் மத்திய அரசு ஊதிய குழுவை அமல்படுத்தும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. 2024 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை எப்போது அமைப்பார்கள் என்பது தொடர்பான சலசலப்பு தற்போது ஊழியர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், 8வது கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரையை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.


நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிடவில்லை


அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதிய குழு அமைப்பது பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி 8வது ஊதிய குழு அமைப்பது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.  ராஜ்யசபாவில் எம்பி ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அடுத்த பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ