பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்க தொடங்கி உள்ளனர்.  இவை பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருந்தாலும் ஒருபுறம் இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.  சமீபகாலமாகவே கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இத்தகைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியானது சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறது.  கார்டுதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிகளை அக்டோபர்-1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.  இதன்மூலம் கார்டுதாரர்களின் விவரங்கள் சேமிக்கப்பட்டு அதன் மூலம் மோசடி குற்றங்கள் நடைபெறுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!


இதனை ஜனவரி-1, 2022 முதல் நடைமுறைப்படுத்த இருந்த நிலையில் ஜூலை-1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, தற்போது இந்த விதிகள் அக்டோபர்-1 முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது.  கார்டுகள் டோக்கனைசேஷன் செய்யப்படுவதன் மூலம் வணிகர்கள் கார்டுதாரர்களின் எவ்வித டேட்டாக்களையும் சேமித்து வைக்க முடியாது,  கார்டு நெட்வொர்க்கால் 16 இலக்க டிஜிட்டல் கார்டு எண் டோக்கனாக மாற்றப்பட்டு சில்லறை விற்பனையாளருக்கு அனுப்பப்படுகிறது.  அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் மூலம் டோக்கனைசேஷன் செய்துகொள்ள வேண்டும், டோக்கனைசேஷன் செய்வதற்கு கார்டுதாரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை.  


கார்டுதாரர்களின் விருப்பத்தின் பெயரிலேயே டோக்கனைசேஷன் செய்யப்படுகிறது, இவ்வாறு டோக்கன்களாக மாற்றப்படுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமுமின்றி கட்டணங்களை செலுத்தலாம்.  டோக்கனைசேஷன் செய்யப்பட்ட பிறகு கார்டுகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் கார்டு வழங்கியவர்களிடம் இதுகுறித்த புகாரை தெரிவிக்கலாம்.


மேலும் படிக்க | RTO Online Services: வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ் வாங்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ