வருமான வரியை தாக்கல் செய்யும்போது, தவறான வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால், வரியை சேமிக்கும் உங்கள் இலக்கு நிறைவேறாது. ஆனால், வரி விதிப்பு முறையைப் பற்றி தெரிந்துக் கொண்டு செயல்பட்டால் வருமான வரி ரிட்டன் (ITR) தாக்கல் செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வரி செலுத்துவோர் இரண்டு வரி முறைகளுக்கு இடையே தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவறான வரி விதிப்பைத் தவறுதலாக தேர்ந்தெடுத்துவிட்டால், கடந்த ஆண்டு நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை சரி செய்வது எப்படி, வரியைச் சேமிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பழைய மற்றும் புதிய வரி முறையை சரியாக புரிந்துக் கொள்ளலாம். 


பழைய வரி முறை
80C, 80D, HRA என பல்வேறு பிரிவுகளில் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம்.


புதிய வரி விதிப்பு
வரி விகிதங்கள் குறைவாக இருந்தாலும், வரி விலக்குகள் மற்றும் சலுகைகள் இதில் கிடைப்பதில்லை.


தவறான வரி முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?


வருமான வரித் தாக்கலில் திருத்தம் செய்ய வேண்டும்
ஒருவர் தவறான வரி முறையைத் தேர்ந்தெடுத்ததை தெரிந்துக் கொண்டால், திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரிமுறையை மாற்றிக் கொள்ளலாம். வருமான வரி செலுத்தும் நேரத்தில் தவறான வரிமுறையை தேர்ந்தெடுத்தாலும் தவறவிட்டாலும், சரி செய்துக் கொள்ளலாம், பதட்டப்பட வேண்டியதில்லை. இதற்கான கடைசித் தேதி பொதுவாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் கடைசித் தேதிக்குப் பிறகு ஒரு வருடத்திற்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் வரி விதிப்பு முறையையும் மாற்றலாம்.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? 


வரிமுறையை தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை
வரிமுறையை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், வரி தொடர்பாக யோசனை சொல்லும் ஆலோசகர்கள் அல்லது பட்டய கணக்காளரிடம் ஆலோசனை பெறுவது உகந்ததாக இருக்கும். எனவே, வரி விலக்கு அதிகமாக கிடைக்குமா இல்லையா, சரியான வரி முறையைத் தேர்வு செய்வது எப்படி, வருமான வரி தாக்கல், திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்வது ஆகியவை, வரி தாக்கலில் தவறு ஏதும் நிகழாமல் இருக்க உங்களுக்கு பல விதங்களிலும் உதவலாம்.


புதிய வரி முறையிலிருந்து பழைய முறைக்கு மாறுவது நல்லதா?


நீங்கள் பணிபுரியும் நிறுவனம் அல்லது முதலாளியால் வழங்கப்பட்ட படிவம் 16 மற்றும் வரி பிடித்தம் தொடர்பான டிடிஎஸ் சான்றிதழில், புதிய வரி விதிப்பின்படி வரி கழிக்கப்படும். மார்ச் 31 வரை வரிச் சேமிப்பிற்காக நீங்கள் செய்த முதலீடுகள், வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி மற்றும் 80சி இன் கீழ் முதலீடுகள் உட்பட, எதுவுமே படிவம் 16 இல் குறிப்பிடப்படாது. 


அந்த நிலையில், நீங்கள் வரிமுறையை மாற்றி திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும்போது, உங்கள் வருமான வரிக் கணக்கில் முதலீடுகள், வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி மற்றும் 80சி ஆகியவற்றை நீங்கள் தனித்தனியாக நிரப்ப வேண்டும். நீங்கள் எந்த விலக்கு கோரினாலும், அதன் ஆதாரத்தை தருவது அவசியம் என்பதால், ரசீதுகள் போன்ற ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.


வரி விதிப்பை மாற்றும்போது விலக்கு பெறுவது 


புதிய வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு,  ஒவ்வொரு ஆண்டும் வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோருக்கு வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC கீழ் கிடைக்கிறது.  


மேலும் படிக்க | அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு 1.65 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது! பாதுகாப்பு அமைச்சகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ