கூட படித்த நண்பருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான பங்களாவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். இந்த செய்தி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். மும்பையின் மிகவும் ஆடம்பரமான கடற்கரைப் பகுதியில் பிருந்தாவனம் என்ற 22 மாடி பங்களா கட்டப்பட்டுள்ளது.1500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டை அம்பானி அவரது நண்பர் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இந்த மனோஜ் மோடி?
கல்லூரி நாட்களில் முகேஷ் அம்பானியுடன் ஒன்றாஅக படித்தவர் மனோஜ் மோடி. நண்பர்களின் எண்ணமும் செயலும் ஒத்துப் போனதால், ஒன்றாகவே இயங்கினார்கள். ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனர் என ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கியமான தலைமை பதவிகளை வகித்த மனோஜ் மோடி ரசாயன பொறியில் பட்டப்படிப்பு படித்தவர்.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் மனோஜ் மோடியின் பங்கு


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கான அனைத்து முயற்சிகளிலும் மனோஜ் மோடியின் பங்கு குறிப்பிடத்தக்கது என தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றானர்.  ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் உலகளாவிய வணிகத்தில் சிறப்பாக செயல்பட இவரது சமோயோஜித அறிவும் ஒரு காரணமாகும்.


மேலும் படிக்க | வெற்றி சைதை துரைசாமியின் மகன் இறந்துவிட்டாரா? டிஎன்ஏ பரிசோதனையில் தடயங்கள்!


நண்பர் - ஆலோசகர் மனோஜ் மோடி


ஹஜிரா பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகம், ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை,ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றிகரமான செயல்பாடு என ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமானத் திட்டங்களில் மனோஜ் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக மோடி பங்களிப்புகள் அவரது நிர்வாக பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறப்படுகிறது.


பேஸ்புக் -ஜியோ ஒப்பந்தம்


முகேஷ் அம்பானிக்கு அனைத்து முக்கிய ஒப்பந்தங்களிலும் ஆலோசகராக இருக்கும் மனோஜ் மோடி, 2020 ஆம் ஆண்டு பேஸ்புக் உடனான ரிலையன்ஸ் ஜியோவின் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தவர். ரிலையன்ஸ் ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை பேஸ்புக் 43,574 கோடிக்கு வாங்கியது.


குடும்ப நண்பர் மனோஜ் மோடி 


முகேஷ் அம்பானியின் வாரிசுகளான இஷா அம்பானி,  ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி என முகேஷின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் மனோஜ் மோடி. தொலைத்தொடர்பு முதல் சில்லறை வணிகம் வரையிலான பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வெற்றிக்கு மனோஜ் மோடியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.


மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?


நண்பருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசு


தன்னுடன் இணைந்து தொழிலிலும் வாழ்க்கையிலும் பயணித்த நண்பர் மற்றும் ஆலோசகருக்கு முகேஷ் அம்பானி பரிசளித்த இந்த அழகான வீடு 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. பார்க்கிங்கிற்கு மட்டுமே மிகப் பெரிய இடம் விடப்பட்டுள்ளது.
ஆடம்பர மாளிகையின் ஒவ்வொரு தளமும் 8000 சதுர அடி என மொத்தம் 22 தளங்கள் உள்ள இந்த வீடு மனோஜ் மோடிக்கு சொந்தமாகிவிட்டது.


மேலும் படிக்க | அடி தூள்!! இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ