வெற்றி சைதை துரைசாமியின் மகன் இறந்துவிட்டாரா? டிஎன்ஏ பரிசோதனையில் தடயங்கள்!

Body Parts Sent To DNA Test: சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு கிடைத்த உடல் உறுப்புகள் மற்றும் தடயங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2024, 10:05 AM IST
  • சைதை துரைசாமியின் மகன் இறந்துவிட்டாரா?
  • தேடுதலில் கிடைத்த உடல் உறுப்புகள் மற்றும் தடயங்கள்
  • டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பட்ட தடயங்கள்
வெற்றி சைதை துரைசாமியின் மகன் இறந்துவிட்டாரா? டிஎன்ஏ பரிசோதனையில் தடயங்கள்! title=

Vetri Duraisamy Accident News in Tamil: இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள பாங்கி நாலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் இன்னோவா வாகனம் சட்லஜ் ஆற்றில் விழுந்த விபத்தில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இறந்திருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். ஆற்றங்கரையில், பெரிய பாறாங்கற்களுக்கிடையே உடல் உறுப்புகள் சில கிடைத்ததாகவும், அது வெற்றி துரைசாமியின் உடலாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிரது.

சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு கிடைத்த உடல் உறுப்புகள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது, அது மனித மூளை போல் தெரிவதாக கூறப்படுகிறது. எனவே, தடயவியல் நிபுணர்கள் DNA பிரித்தெடுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்காக அதை அனுப்பியுள்ளனர். காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான இவர், சினிமா துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக பிப்ரவரி ஐந்தாம் தேதி பிற்பகல் ஹிமாச்சல் மாநிலம் காசாவில் இருந்து சிம்லா விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க | இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

வெற்றி துரைசாமி பயணித்த கார் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓட்டுநரின் கட்டுப்பாடு தளர்ந்த நிலையில், மலைப்பகுதியின் குறுகலான சாலையில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்துவிட்டது.

இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.வெற்றி துரைசாமி எங்கே என்று தெரியாத நிலையில்,   இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மீட்புப் பணிகள் துரிதப்பட்ட நிலையில், தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகவும் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேடுதலில் போது ஆற்றங்கரையில் இருந்து மனித உடல் பகுதி கிடைத்துள்ளதாகவும், அது வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்தேகங்கல் இருந்தாலும், வெற்றி துரைசாமியை தேடும் பணிகளும் தொடர்கின்றன.  

மேலும் படிக்க | Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்...? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் - விபத்து ஏற்பட்டது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News