Bonus For Tamil Nadu Ration Shop Workers: கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில்,"இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியமும், 11.67 விழுக்காடு கருணைத்தொகையும் என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரத்து 400 வரை போனஸ் கிடைக்கும். போனஸ் சட்டத்தின்கீழ் வராத  கூட்டுறவுசங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400 என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக 44,270 பணியாளர்களுக்கு போனஸ் வழங்க சுமார் 30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார். 


தீபாவளிக்கு போனஸ்


தமிழ்நாடு அரசு அதன் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் தொகை வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில், முன்னதாக இந்தாண்டு தீபாவளிக்கும், அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை கடந்த அக். 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா? வருமான வரி சட்டம் கூறுவது என்ன?


அதன்படி, வரும் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு வாணிபக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என போனஸ் தகுதி உடைய ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். குறிப்பாக, அதிலும் நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும்.


போனஸ் விடுமுறை


அதேபோல், தீபாவளிக்கு போனஸ் தொகை வழங்கியது மட்டுமின்றி அரசு ஊழியர்கள் உள்பட ஆசிரியர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) போனஸாக விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால், அக். 31ஆம் தேதி தீபாவளியில் இருந்து நவ. 3ஆம் தேதி வரை என வியாழன் முதல் வெள்ளி வரை விடுமுறைதான். இது ஊழியர்களுக்கு இரட்டிப்பு குஷியை கொடுத்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 3% சதவீதம் உயர்த்தியும் தமிழ்நாடு அரசு இம்மாதம் அறிவித்திருந்தது. 


மேலும் படிக்க | வாத்தி CoMing ஒத்து! மாஸ் காட்டிய விஜய் கட்சியினர்! அனல் பறக்கும் தவெக!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ