Diwali Bonus For Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்க்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில், தீபாவளிக்கும் முன் இந்த அறிவிப்பு வரக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போனஸ் பரிசு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசாங்கம்


அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்கு முன்னதாக, மத்திய மோடி அரசு (Modi Government), மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை பரிசாக வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2023-24 நிதியாண்டுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கான (Non-Productivity Linked Bonus) (அட் ஹாக் போனஸ்) அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் கீழ், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு இணையான தொகை போனஸாக கிடைக்கும். 


Group B and Group C Employees


நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'தகுதியான பணியாளர்களில், வேறு எந்த உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட போனஸ் திட்டத்தின் பகுதியாகவும் இல்லாத,  குரூப் 'சி' மற்றும் குரூப் 'பி'-இன் நான்-கெசடட் பணியாளர்கள் அடங்குவர்.' என்று கூறப்பட்டுள்ளது.  


Eligibility for Government Bonus: தீபாவளி போனஸ் யாருக்கு கிடைக்கும்?


- போனஸ் கணக்கிட பயன்படுத்தப்படும் அதிகபட்ச மாத சம்பளம் ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
- மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் தகுதியான ஊழியர்களும் இந்தப் பலனைப் பெறுவார்கள். 
- மேலும், மார்ச் 31, 2024 வரை பணியில் இருந்த ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும். 
- இந்த ஊழியர்கள் 2023-24 ஆம் ஆண்டில் குறைந்தது 6 மாதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?


வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்றவர்கள் அல்லது மார்ச் 31 க்கு முன் இறந்தவர்கள், ஆனால் நிதியாண்டில் ஆறு மாதங்களுக்கு வழக்கமான பணியைச் செய்தவர்கள், தற்காலிக போனஸுக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள். அனைத்து கொடுப்பனவுகளும் அருகிலுள்ள முழு ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும். செலவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் திட்டங்களுக்குள் இது ஏற்கப்படும்.


தீபாவளி போனஸ் கணக்கீடு (Diwai Bonus Calculation)


அட்ஹாக் (Ad-Hoc) போனஸின் கீழ் வழங்கப்படும் தொகையை நிர்ணயிக்க ஒரு விதி உருவாக்கப்பட்டது. போனஸ் தொகை, சராசரி ஊதியங்களை 30.4 ஆல் வகுத்து, பின்னர் அதை 30 நாட்களால் பெருக்கி கணக்கிடப்படும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.


- ஒரு பணியாளரின் மாதச் சம்பளம் ரூ.7,000 என வைத்துக்கொள்ளலாம்.
- அவரது போனஸ் தோராயமாக ((7000/30.4)  x 30 = 6908). அதாவது போனஸ் தொகை ரூ.6,908 ஆக இருக்கும். 


Casual Labor Bonus Eligibility


ஒரு வருடத்தில் குறைந்தது 240 நாட்கள் என தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை செய்யும் கேசுவல் தொழிலாளர்களும் இந்த போனஸுக்கு தகுதி பெறுவார்கள். இந்த போனஸ் மாதத்திற்கு ரூ.1,200 என்ற அடிப்படையில் கணக்கிடப்படும். 


இந்த முடிவால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். தீபாவளி பண்டிகை நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் செலவை ஈடுகட்ட இந்த கூடுதல் தொகை அவர்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் படிக்க | 1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ