QR கோட் ஸ்கேன் செய்ய வேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது என்று கருதப்பட்டாலும், மறுபுறம் இதனால் ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் வழக்குகளும் அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளாகவே மொபைலின் க்யூஆர் குறியீட்டின் மூலம் மோசடி செய்யப்படும் அவலம் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது, அதாவது யாரிடமிருந்தும் கியூஆர் குறியீட்டை பெற்றாலும் ஒருபோதும் தவறுதலாகக் கூட அதனை ஸ்கேன் செய்துவிட வேண்டாம் என்று வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அப்படி தவறுதலாக நீங்கள் அதுபோன்ற கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் கணக்கிலுள்ள பணம் காணாமல் போய்விடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | EPFO: ஓய்வூதிய திட்டத்தில் அசத்தல் மாற்றங்கள், மக்களுக்கு பம்பர்
மோசடி குறித்து எஸ்பிஐ வங்கி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், 'பணத்தைப் பெற கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை, ஒவ்வொரு முறையும் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் போதும் நீங்கள் பாதுகாப்பு குறிப்புகளை கவனமாக மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கியூஆர் குறியீடு என்பது எப்போதும் பணம் செலுத்துவதற்கு மட்டுமே தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர பணம் பெறுவதற்கு அல்ல, அதனால் பணம் பெறுவதற்கு கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்று செய்தி வந்தால் அதனை நிராகரித்துவிடுங்கள். அப்படி வரும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது, உங்கள் கணக்கிலுள்ள பணம் தான் பறிபோகும். மேலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது, அதனை பின்பற்றுவதன் மூலம் மோசடியிலிருந்து தப்பிக்க முடியும்.
1) பணம் செலுத்தும் முன் யூபிஐ ஐடியைச் சரிபார்க்க வேண்டும்.
2) யூபிஐ மூலம் பணம் செலுத்தும் போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
3) யூபிஐ பின் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவை, பணம் பெறுவதற்கு அல்ல.
4) பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் யூபிஐ ஐடி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
5) யூபிஐ பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
6) யூபிஐ பின்னை மறக்க வேண்டாம்.
7) நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தவும்.
8) எப்போதும் அதிகாரபூர்வமான இடங்களை தவிர்த்து மற்ற மூலங்களிலிருந்து தீர்வுகளை தேட வேண்டாம்.
9) பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு செயலியின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும்.
10) குறைகள் இருப்பின் வங்கியின் குறை தீர்க்கும் போர்டல் https://crcf.sbi.co.in/ccf/ மூலம் தீர்வு காணலாம்.
மேலும் படிக்க |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ