இந்தியாவின் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக விளங்கிய லஷ்மி விலாஸ் வங்கி சமீபத்தில் DBS வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. பல முடிவுகள் திடீரென் எடுக்கப்பட்டு பலர் ஆச்சரியப்படும் வகையிலும், பலர் அதிர்ந்து போகும் வகையிலும், இந்த வங்கியில் கடந்த சில நாட்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதிகளவிலான வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனை ஆகியவை இவற்றில் முதன்மைக் காரணங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் காரணமாக தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லட்சுமி விலாஸ் வங்கி சிங்கப்பூர் DBS வங்கியின் இந்தியக் கிளையுடன் இணைக்கப்பட்டது.


லக்ஷ்மி விலாஸ் வங்கி DBS வங்கியுடன் (DBS Bank) இணைந்ததால், வங்கி திவால் ஆகும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டதோடு, வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாக்கப்பட்டது.


கடந்த சில நாட்களாக இந்த வங்கியைப் பற்றி பலவித எதிர்மறை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும், இதை சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்த்தால், இதிலிருந்து வங்கியின் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளையும் பெற முடியும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.


DBS வங்கியின் செல்வாக்கு


DBS வங்கி சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு வங்கியாகும். இது ஆசியாவிலேயே சிறந்த நிதி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த வங்கியின் வர்த்தகம் உலகெங்கிலும் சுமார் 18 நாடுகளில் நடக்கின்றது. இப்படிப்பட்ட வங்கியுடன் இணைந்துள்ளதால் Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


FD-யில் அதிக வட்டி


பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களைப் பொறுத்தவரையில், பொதுவாக, இந்தியாவின் மிகச் சிறந்த வங்கிகளாக கருதப்படும், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பல முன்னணி வங்கிகளை விட, தற்போது DBS வங்கியுடன் இணைந்துள்ள லட்சுமி விலாஸ் வங்கி அதிக வட்டியை அளிக்கின்றது.


லட்சுமி விலாஸ் வங்கி அதிகப்படியாக 7.5 சதவீதம் வட்டியில் பிக்சட் டெபாசிட் சேவை அளித்து வருகிறது.


365 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி


366 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம் - 7% வட்டி


367 நாள் முதல் 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி


3 முதல் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி


5 முதல் 10 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி


தற்போது DBS இந்தியா வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி இந்த அனைத்து திட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டியை அளிக்கிறது.


ALSO READ: லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி...


வட்டி விகிதத்தில் மாற்றமில்லை


லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, சேமிப்பு கணக்கு, வைப்பு நிதிக்குக் கொடுக்கப்பட்ட அதே வட்டி விகிதம் (Interest Rate) DBS வங்கி நிர்வாகத்திலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றத்தால் பணி நீக்கம் இல்லை


நிறுவன இணைப்பு ஏற்பட்டால், இணைக்கப்பட்ட நிறுவனத்தில் பலர் நீக்கப்படுவது பொதுவாக நடக்கும் ஒன்றாகும். ஆனால் லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ஊழியர்களும் தற்போது இருக்கும் அதே பணியில் DBS வங்கியின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியில் இருக்கும் அதே கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தொடரும் என்றும், இதில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் DBS இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.


மாற்றி யோசித்தால் மாறும் கண்ணோட்டம்


லட்சுமி விலாஸ் வங்கி குறித்த பல எதிர்மறையான செய்திகள் வந்து, இறுதியாக அந்த வங்கி DBS வங்கியுடன் இணைக்கப்பட்டதால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலங்கிப்போயினர். வங்கியில் உள்ள தங்களது சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சம் அனைவரையும் பற்றிக்கொண்டது. ஆனால், இந்த விஷயத்தை சற்று மாற்றி சிந்தித்துப் பார்த்தால் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதையும் இந்த இணைப்பால் பல நன்மைகளே நடந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.


ALSO READ: Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR