புதுடெல்லி: நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank (PNB)) பணி புரிபவர்களுக்கு சிறப்பு சம்பளக் கணக்கைக் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் PNB MySalary Account.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீரோ இருப்பு கணக்கை மத்திய / மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம்,எம்.என்.சி, புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற கார்ப்பரேட், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களால் திறக்க முடியும். இருப்பினும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களின் கணக்குகள் இந்த வகை கணக்குகளின் கீழ் திறக்கப்படுவதில்லை.  


Also Read | குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?


சம்பளக் கணக்கு (salary account) வெள்ளி, தங்கம், பிரீமியம் மற்றும் பிளாட்டினம் என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் Variants/Drawing Gross Salary per Month/Scheme Code என பிரிக்கப்பட்டுள்ளது:


வெள்ளி: ரூ .10,000 முதல் ரூ .25,000 வரை


தங்கம்: ரூ .25,001 முதல் ரூ .75,000 வரை


பிரீமியம்  2,25,000 ரூபாய் முதல் 1,50,000 வரை


பிளாட்டினம்: ரூ .1,50,001 மற்றும் அதற்கு மேல்


3 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வசதி


Also Read | மியான்மர் போராட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் காரணம் என்ன?


பஞ்சாப் தேசிய வங்கி சம்பளக் கணக்கின் முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர் கடந்த இரண்டு மாதங்களில் பெற்ற நிகர சம்பளத் தொகையின் அளவிற்கு ஓவர் டிராப்ட் வசதியைப் பெறலாம் ’நெட் சம்பளம் வட்டி விகிதத்தில்  ‘RLLR + 3.70% ஆண்டுக்கு என்ற விகிதத்தில் இருக்கும். நேரடியாக விண்ணப்ப படிவம் கொடுத்து கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் ஓவர் டிராஃப்ட் வரம்பு அனுமதிக்கப்படும். இதில் ஓவர் டிராஃப்ட் எந்த அளவுக்கு கொடுக்கப்படும் என்பதை தீர்மானிப்பது வங்கியின் உரிமை ஆகும்.  


கடன் காலத்தின்போது, தங்கள் பணியாளரின் சம்பளக் கணக்கு மாற்றப்படாது / பிற வங்கிகளுக்கு மாற்றப்படாது எனற உறுதிமொழியை, தங்கள் நிறுவனத்திடம் என்று பெற்றுத் தந்தால் போதுமானது.  ஓவர் டிராஃப்டின் அதிகபட்ச அளவு பின்வருமாறு: -


சில்வர்: ரூ .50000


தங்கம்: ரூ .1,50,000


பிரீமியம்: ரூ .2,25,000


பிளாட்டினம்: ரூ .3,00,000


Also Read | Pan-Aadhaar இணைக்கப்பட்டுள்ளதா? இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம்


திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட / பராமரிக்கப்படும் சேமிப்பு வங்கி கணக்குகள் ஸ்வீப்-இன் / அவுட் வசதியைக் கொண்டிருக்கும். முதன்மை கணக்கு வைத்திருப்பவரின் அங்கீகாரத்தின் பேரில், சம்பளக் கணக்கில் ஆரம்ப வரம்பு ரூ .20,000 / - ஐ உறுதிசெய்த பின்னர் தானாகவே தொடங்கப்படும், குறைந்தபட்சம் ரூ .1,000 / -  அதற்குப் பிறகு 1000 ரூபாயின் மடங்குகளில் இருக்கும்.


ஸ்வீப் வசதி மூலம் உருவாக்கப்பட்ட டி.டி.ஆர் / எஸ்.டி.டி.ஆர் கள் 7 முதல் 365 நாட்களுக்கு வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு எஃப்.டி.யின் கீழ் இருந்திருந்தால், கணக்கில் ஸ்வீப்-இன் / அவுட் தொகையின் ஒற்றை கால வைப்புக்கான தற்போதைய நிலையான வைப்பு வட்டி விகிதங்களைப் பெறுவார். 


Also Read | கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்


தனிப்பட்ட விபத்து காப்பீட்டு பாதுகாப்பு


கூடுதலாக, அனைத்து வகைகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ .20 லட்சம் தனிநபர் விபத்து காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும்.


இருப்பினும், ஒரு காலண்டர் காலாண்டில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால், கணக்கு சேமிப்பு நிதிக்கு (Saving Fund General) மாற்றப்படும்  


மேலும் தகவலுக்கு, https://www.pnbindia.in/salary-saving-products.html என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.


Also Read | வைரலாகும் Anushka Sharmaவின் மனம் மயக்கும் மாயப் புன்னகை புகைப்படம்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR