அனைத்து பான் கார்டுகளையும் ஆதார் உடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 18 கோடி பேர் இன்னும் ஆதார்- பான் அட்டையை இணைக்கவில்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31ம் தேதி என இருந்த நிலையில், தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்கவில்லை என்றால் ₹1000 அபராதம் விதிக்கப்படலாம்.
எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக இணைத்து விடுங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு எண் (PAN) மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியான ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செல்லாததாகி விடும்.
முறையாக பான் கார்டு ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோர் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் கீழ், வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் பான் மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது அவசியம். இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோரின் வரி திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கலை எதிர் கொள்ளக் கூடும்.
முதலில் உங்கள் பான் அட்டை ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்
- இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
- இடதுபுறத்தில் எழுதப்பட்ட க்விக் லிங்கஸ் ர்ன கொடுக்கப்பட்டிருக்கும். அங்கே கிளிக் செய்ய வேண்டும்.
- புதிதாக தோன்றும் பக்கத்தின் மேல் ஒரு ஹைப்பர்லிங்க் இருக்கும், அங்கு ஆதார் இணைப்பு குறித்த தகவல்கள் இருக்கும்
- இந்த ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- இதற்குப் பிறகு, அதில், வ்யூ லின்க் ஸ்டேடஸ் என்னும் இணைப்பை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டிருக்கிறதா இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
- ஆதார் அட்டையை பான் கார்டுடன் எவ்வாறு இணைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறை
- உங்கள் தொலைபேசியில், பெரிய எழுத்தில் IDPN என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு ஆதார் எண் மற்றும் பான் எண்ணை உள்ளிடவும்.
- இந்த தகவலை 567678 அல்லது 56161 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும்.
- இதன் பின்னர் வருமான வரித் துறை இரு ஆவணங்களையும் இணைக்கும் பணியைத் தொடங்கும்.
- ஆதார் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும் சுலபமாக இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள்- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடது பக்கத்தில் உள்ள க்விக் லிங்க் ஆப்ஷனை, கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு அதில் கணக்கு இல்லை என்றால், முதலில் பதிவு செய்யுங்கள். இங்கே நீங்கள் பான், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும். பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
- OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.
ALSO READ | IPL 2021 ரசிகர்களுக்கு Good News! Reliance Jio கொண்டுவந்துள்ளது அசத்தல் திட்டங்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR