புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) பண்ணையில் விளையும் காய்கறிகளை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்கண்டின் வேளாண்மைத் துறை இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள தனது விவசாயப் பண்ணையில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். அவற்றை துபாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தோனியின் பண்ணையில் விளையும் (Agriculture) காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொறுப்பை ஜார்க்கண்டின் வேளாண்மைத் துறை எடுத்துள்ளது.
காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


All Seasons Farm Fresh என்ற நிறுவனம் பல விவசாய பொருட்களை வெளி நாடுகளுக்கு அனுப்ப உதவுகிறது. எம்.எஸ்.தோனியின் காய்கறிகளை துபாய்க்கு (Dubai) வழங்கும் பணியையும் இந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.  


Also Read | மாயம் அல்ல விவசாயம்: சுவரில் விளையும் காய்கறிகள், சூடுபிடிக்கும் செங்குத்து வேளாண்மை


தோனியின் (MS Dhoni) சுமார் 43 ஏக்கர் அளவுக்கொண்ட விவசாய பண்ணை வீட்டில் சுமார் 10 ஏக்கர் அளவில் ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், தக்காளி, ப்ரோக்கோலி, பட்டாணி, உருளைக்கிழக்கு மற்றும் பப்பாளி என பல உணவுப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இது தவிர, மிகப் பெரிய அளவில் முட்டைக்கோஸ், தக்காளி, பட்டாணி ஆகியவையும் பயிரிடப்பட்டுள்ளன.


தோனியின் (MS Dhoni) வயல்களின் விளையும் காய்கறிகள் organic காய்கறிகளாகும். தற்போது organic காய்கறிகளை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இது தவிர, தோனியின் பால்பண்ணையில் இருந்து விற்பனைக்கு வரும் பால் ராஞ்சி மக்களின் விருப்பப் பாலாக மாறிவிட்டது.  


Also Read | PM Kisan: 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் இங்கே புகார் செயலாம்!


தற்போது மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் துபாயில் விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார். துபாயில் புத்தாண்டு கொண்டாடினார்.  
கிரிக்கெட்டில் சாதனை படைத்த தோனி, தற்போது விவசாயத்திலும், தொழிலும் ஆர்வம் காட்டிவருகிறார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR