PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?
EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
EPFO Update: அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாதா மாதம் இபிஎஃப் கணக்குக்கான தொகை கழிக்கப்படுகின்றது. நீங்களும் பிஎஃப் உறுப்பினராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல வித நன்மைகளை அளிக்கின்றது. இவற்றில் பல நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிமுறை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்!! PF ஊழியர்களுக்கு வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPFO மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனை வழங்குகிறது. இதைப் பற்றி அனைத்து பிஎஃப் உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். PF ஊழியர்களுக்காக அரசாங்கம் EPF மற்றும் EPS திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இந்த இரண்டில், இபிஎஸ் திட்டம் பிஎஃப் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. இந்தத் திட்டத்தின் கீழ், பிஎஃப் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியப் பலன் வழங்கப்படும். நீங்கள் ஓய்வூதியத்தின் பலனைப் பெற விரும்பினால், முக்கியமான சில விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்
EPS பிஎஃப் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்
ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது. EPS திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெறலாம். ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன்களைப் பெறுகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் யாருக்கு நன்மை கிடைக்கும்?
58 வயது நிரம்பிய மற்றும் ஓய்வு பெற்ற சில பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். இபிஎஸ் திட்டம் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய EPF உறுப்பினர்களும் அடங்குவர்.
ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் 12 சதவீதத்தை இபிஎஃப் நிதிக்கு வழங்குகிறார்கள். இது தவிர, நிறுவனமும் அதே அளவு தொகையை EPF கணக்கில் செலுத்துகிறது. ஒவ்வொரு மாதமும் முதலாளி/நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவிகிதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) 3.67 சதவிகிதம் EPF கணக்கிற்கும் செல்கிறது.
பணியாளர் ஓய்வூதியத் திட்டம்
EPS திட்டம் EPFO ஆல் தொடங்கப்பட்டது. இது PF உறுப்பினர்களுக்கு லாபகரமானதாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் பலன்களைப் பெற,
- EPFO இல் உறுப்பினராக இருப்பது மிகவும் முக்கியம்.
- நீங்கள் 10 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
- உங்களுக்கு 58 வயதாகியிருக்க வேண்டும்.
- நீங்கள் 50 வயதை அடையும் போது EPS இலிருந்து பணத்தை எடுக்க ஆரம்பிக்கலாம்.
இதில், 2 ஆண்டுகள் (60 வயது வரை) ஓய்வூதியத்தை நிறுத்தவும் செய்யலாம். EPS 1995 இன் அட்டவணை-C ஐப் பொறுத்தது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.15,000 வரை ஓய்வூதிய பலனைப் பெறலாம்.
மேலும் படிக்க | CIBIL ஸ்கோர் சிறப்பாக இருந்தால்... கிடைக்கும் எக்கசக்க நன்மைகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ