புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்

புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 10, 2024, 07:06 AM IST
  • புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா?
  • உங்களுக்கு தேவையான ஆவணங்கள் இதுதான்
  • ஆதார் கார்டு
புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட் title=

தமிழ்நாடு அரசிடமிருந்து ரேஷன் கார்டு வாங்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பதற்கான முகவரிச் சான்று தேவை. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் குறைந்தது ஆறு மாத காலம் தமிழ்நாட்டில் தங்கியிருந்தால் ரேஷன் கார்டு கிடைக்கும். ஆனால் அவர்கள் வேறு மாநிலத்தில் அதாவது அவர்களுடைய சொந்த ஊரில் ஏற்கெனவே ரேஷன் கார்டு வைத்திருந்தால் தமிழ்நாட்டில் புது ரேஷன் கார்டு வாங்க முடியாது.

ரேஷன் கார்டுக்கு தேவையான ஆவணம்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் கார்டு தேவை. இருப்பிடச் சான்று மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு முக்கியம். முகவரிச் சான்றாக சிலிண்டர் பில்லையும் நீங்கள் வழங்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களுக்குள் சிலிண்டர் எடுத்திருக்க வேண்டும். குடும்ப நபர்களின் ஆதார் கார்டும் தேவைப்படும். இந்த ஆவணங்கள் இருந்தால்தான் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்

ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும்

தனிநபர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. ஆனால், 55 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் ரேஷன் கார்டு வாங்கலாம். வேறொரு ரேஷன் கார்டில் பெயர் இருந்தால் இன்னொரு ரேஷன் கார்டு வாங்க முடியாது. ஏனெனில் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் உள்ளதா என்று எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். உதாரணமாக, புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிய பின்னரே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். புதிதாக திருமணம் ஆன பிறகு ஆண் பெண் ஒருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும். அதற்கு திருமண அழைப்பிதழ் தேவைப்படும். திருமண சான்றிதழும் கொடுக்கலாம்.

20 நாட்களில் ஒப்புதல்

அப்போதுதான் பெயரை நீக்க முடியும். இருவரின் பெயரும் நீக்கப்பட்ட பிறகே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் சிலிண்டர் இணைப்பு வாங்க வேண்டும். தனியாக சிலிண்டர் இணைப்பு இல்லாவிட்டால் கார்டு கிடைக்காது. அரசு இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க முடியும். நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும். அதேபோல, விண்ணப்பித்த 2 மாதங்களில் ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.

ரேஷன் கார்டு எங்கு கிடைக்கும்?

ரேஷன் கார்டு நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்படாது. தாலுகா அலுவலகத்துக்கு முதலில் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட நபர் அங்கே சென்று கார்டை வாங்கிக் கொள்ளலாம். அல்லது நீங்கள் வசிக்கும் ஏரியாவில் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைக்கு கார்டு அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு டெலிவரி செய்யப்பட்டதற்கான தகவல் SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

மேலும் படிக்க | PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News