பாதுகாப்பான முதலீட்டிற்கான வழிகளை தேடும் முதலீட்டாளர்களுக்கு வங்கி வைப்பு நிதி சிறந்த முதலீட்டு திட்டம். இன்றைய காலகட்டத்தில், பல வங்கிகள் முதலீட்டை ஈர்க்க மூத்த குடி மக்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுவாகவே சாதாரண குடி மக்களை விட மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இளைஞர்கள் கூட தங்கள் வயதான பெற்றோரின் பெயரில் எப்படி கணக்கை திறக்கும் பழக்கமும் கூட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்


வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு, அதிக வட்டி தரும் வங்கிகள் அவர்கள் நிதி ரீதியாக யாரையும் சாராமல் இருக்க பெரிதாக உதவுகின்றன என்றால் மிகையில்லை. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு எஃப்டி முதலீட்டில் அதிக வட்டி தரும் முக்கிய வங்கிகளை (Investment Tips) பற்றி அறிந்து கொள்ளலாம்.


பாரத ஸ்டேட் வங்கி (SBI)


SBI என்னும் பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வட்டி முதலீட்டு காலங்களுக்கு ஏற்ப, 7.3%  முதல் 7.5% வட்டி என்ற அளவில் உள்ளது. 


1. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செய்யப்படும் FD முதலீட்டிற்கு 7.3% வட்டி வழங்கப்படுகிறது.


2. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு செய்யப்படும் முதலீடுகளுக்கு 7.5% வட்டியு வழங்கப்படுகிறது.


3. அமிர்த கலசம் என்ற சிறப்பு எப்டி மீதான வட்டி விகிதம் 7.6 % என்ற அளவிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.


HDFC வங்கி


HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டி அளிக்கிறது. இது ஒரு வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான காலத்திற்கு செய்யப்பட்ட எப்படி முதலீடுகள் மீதான வட்டி அகும். ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட எப்படி கணக்கிற்கான வட்டி விகிதம் 7.1% முதல் 7.75% வரை இருக்கும்.


1. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான எப்படி கணக்கிற்கு 7.6% வட்டி கிடைக்கும்.


2. 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் வரையிலான காலகட்டத்திற்கான FD முதலீட்டிற்கு 7.5% வட்டி கிடைக்கும்.


3. 5 - 10 ஆண்டுக்கான FD முதலீட்டிற்கு 7.5% வட்டி கிடைக்கும்.


4.  4 ஆண்டு 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரையிலான FD கணக்கிற்கு 7.7% வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படி.. தொடர்ந்து 8வது ஊதியக்கமிஷனா?


ICICI வங்கி


ICICI வங்கி வழங்கும் வட்டி, முதலீட்டு காலங்களுக்கு ஏற்ப, 7%  முதல் 7.2% வட்டி என்ற அளவில் உள்ளது.  


1. ஒரு வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான காலத்திற்கான FD முதலீட்டிற்கு 7.2 % வட்டி கிடைக்கும்.


2. 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான முதலீட்டிற்கு 7.05% வட்டியும், நீண்டகால கணக்கிற்கான வட்டி விகிதம் 7% என்ற அளவிலும் உள்ளது.


பேங்க் ஆப் பரோடா


பாங்க் ஆப் பரோடா வங்கி வழங்கும் வட்டி, முதலீட்டு காலங்களுக்கு ஏற்ப 7.35 சதவீதம் முதல் 7.75 சதவீதம் என்ற அளவில் மாறுபடும். 


1. மூத்த குடிமக்களுக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை எஃப்டிக்கு 7.35 சதவீத வட்டியை வழங்குகிறது. 


2. 2 - 3 வருட FDக்கு 7.75 சதவீத வட்டிகிடைக்கும்


3. பேங்க் பரோடா ட்ரைகலர் பிளஸ் எஃப்டிக்கு 7.65 சதவீத வட்டி கிடைக்கும்


கோடக் மஹிந்திரா வங்கி


கோடக் மஹிந்திரா வங்கி முதலீட்டு காலங்களுக்கு ஏற்ப 6.7 சதவீதம் முதல் 7.8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 


1. ஒரு வருட FD க்கு வங்கி 7.6 சதவீத வட்டி கிடைக்கும்.


2.  390 நாட்களுக்கான முதலீடுகளுக்கு 7.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 


3. 23 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான FD மீதான வட்டி விகிதம் 7.8 சதவீதம்.


4. 2-3 வருட FDக்கு 7.65 சதவீத வட்டியை வங்கி கிடைக்கும்.  


மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ