COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 செப்டம்பர் காலக்கெடு: இந்த ஆண்டின் 9வது மாதம் அதாவது செப்டம்பர் 2023 கிட்டத்தட்ட முடிவடைகிறது. இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நிலுவையில் உள்ள உங்கள் எல்லா பணிகளையும் நீங்கள் முடிக்க வேண்டும். இதனால் நீங்கள் மேலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. சில பணிகளை நிறைவெ செய்ய கடந்த பல மாதங்களாக கோரப்பட்டு வந்த நிலையில் தற்போது காலக்கெடு நெருங்கி வருகிறது. இந்த பணிகளுக்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2023 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டை மாற்றுவது அல்லது சிறுசேமிப்பு திட்டங்களின் கணக்குகளில் ஆதார் அட்டையைப் புதுப்பிப்பது போன்ற சில பணிகளை நீங்கள் விரைவில் முடிக்க வேண்டும். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன் எந்தெந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து குறித்த காலக்கெடு


இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின்படி, வங்கியில் லாக்கர் வசதியை பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இது சம்பந்தமாக, வங்கியின் கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி லாக்கர் வசதியை பெற முடியாது. இது தொடர்பாக பல வங்கிகள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் செய்திகளையும் அனுப்பியுள்ளன.


ரூ 2000 நோட்டு காலக்கெடு


ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது திருப்பித் தரவோ மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர் 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால், இந்த தேதிக்கு முன் டெபாசிட் செய்யவும் அல்லது வங்கியிடம் அளித்து வேறு ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளவும், இல்லையெனில் இந்த நோட்டுகள் மதிப்பிழந்து உங்களுக்கு நஷ்டம் ஆகிவிடும்.


SBI WeCare திட்டம்


பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தனது சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான VCare திட்டத்தை நிறுத்த போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முதலீடு செய்யுங்கள். இது SBI வங்கி வழங்கும் சிறப்பு FD திட்டமாகும். இது அதிக வட்டி விகிதத்துடன் கூடிய திட்டம். இதனால் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். எனவே, நீங்களும் அதிக வட்டி விகிதத்தை கொடுக்கும் FD கணக்கில் முதலீடு செய்ய விரும்பினால், 30 ஆம் தேதிக்குள் முதலீடு செய்யுங்கள்.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!


SSSY ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு


சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், தங்கள் கணக்கில் ஆதார் அட்டை விபரங்களை புதுப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது பிற சிறிய திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து இருந்தால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் கணக்கில் ஆதார் விபரங்களை இணைக்கவும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.


எல்ஐசி தன் விருத்தி (LIC Dhan Vriddhi) திட்டம் நிறுத்தப்பட உள்ள தேதி


லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதன் ஒற்றை பிரீமியம் திட்டம் ஒன்றை மூடப் போகிறது, அதாவது தன் விருத்தி யோஜனா LIC Dhan Vriddhi. இந்தத் திட்டம் 30 செப்டம்பர் 2023 இல் நிறுத்தப்படும். உத்தரவாதமான வருமானத்துடன் இந்த வாழ்நாள் பாலிசியில் முதலீடு செய்ய விரும்பினால், இந்த பாலிசியை 30ஆம் தேதிக்குள் எடுத்துக் கொள்ளலாம்.


IDBI அம்ரித் மஹோத்சவ் FD


ஐடிபிஐ (IDBI) வங்கி சிறப்பு அமிர்த மஹோத்சவ் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடக்கியுள்ளது, இதில் நீங்கள் செப்டம்பர் 30 வரை முதலீடு செய்யலாம். 375 நாட்களுக்கு FD இல் 7.10% வரை வட்டி விகிதம் கிடைக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியைப் பெறலாம்.


மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ