7% வட்டி, பி.எஃப் தள்ளுபடி, சலுகை வட்டியில் தங்கக் கடன் கொடுக்கும் வங்கி எது தெரியுமா?
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (ஈ.எஸ்.எஃப்.பி) (Equitas Small Finance Bank (ESFB)) பெண்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்கும் `ஈவா` சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்துவதாக திங்கட்கிழமையன்று அறிவித்தது.
புதுடில்லி: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (ஈ.எஸ்.எஃப்.பி) (Equitas Small Finance Bank (ESFB)) பெண்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்கும் 'ஈவா' சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்துவதாக திங்கட்கிழமையன்று அறிவித்தது.
ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு என வாழ்வின் பல்வேறு அம்சத்திலும் இந்திய பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்திடும் வகையில், பெண்களுக்கென பிரத்யேகமான சேமிப்புக் கணக்கு ஈவா ('Eva') என்று Equitas Small Finance Bank (ESFB) அறிவித்துள்ளது.
"சேமிப்புக் கணக்கில் 7 சதவிகித வட்டி என்பது இந்த கணக்கின் சிறப்பம்சம். அது மட்டுமல்ல, இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு, மருத்துவர்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மனநல நிபுணர்களுடன் இலவச சுகாதார சோதனை மற்றும் வரம்பற்ற தொலைபேசி ஆலோசனையையும் வழங்கப்படும்" என்று வங்கி தெரிவித்துள்ளது.
இது பெண் வாடிக்கையாளர்களுக்கு பி.எஃப் தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் தங்கக் கடனையும் வழங்கும். பெண்கள் பாதுகாப்பு பெட்டகம் எனப்படும் லாக்கர்கள் வசதியை பெற்றால், அதற்கு வழக்கமான கட்டணத்தில் 25-50 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.
அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள், பெண் தொழிலதிபர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு பெண்களும் ஈவா (Eva) சேமிப்புக் கணக்கு வசதியை பெற்று பயனடையலாம்.
"Equitas Small Finance Bank அனைத்து பிரிவுகளைச் சார்ந்த பெண்களுக்கும் எல்லாத் தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும், அவர்கள் சுயமாகவே பொருளாதார முடிவு எடுக்க வேண்டும் என்பதிலும் வங்கி ஆர்வம் கொண்டுள்ளது. மகளிர் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் எங்கள் பங்கை உணர்ந்து இந்த முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு சேமிப்புக் கணக்கு ஈவா (Eva) சேமிப்புக் கணக்கு" என்று ESFB வங்கியின் தலைவர் முரளி வைத்தியநாதன் தெரிவித்தார்.
Also Read | மாபெரும் பணக்காரி மெலானியாவா? இல்லை இவாங்காவா? @Trump
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR