Salary: இனி உங்கள் மாத சம்பளம் குறையலாம்; காரணம் தெரியுமா?
மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்ட சமூக பாதுகாப்பு திட்டம் உங்கள் மாத சம்பளத்தை குறைக்கும். காரணம் தெரியுமா?
உங்கள் சம்பளம் எதிர்வரும் நிதியாண்டில் இருந்து குறையலாம். அதாவது உங்களுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தங்கள் போக கைக்கு வரும் நிகர ஊதியம் குறைக்கப்படலாம்; பணிக்கொடை (Gratuity) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) என பிடித்தங்களின் விகிதம் உயரக்கூடும்.
மத்திய அரசு (central government) அறிவித்துள்ள ‘ஊதியக் குறியீடு மசோதா 2019’ (Code on Wages 2019) தொடர்பான வரைவு விதிகளில் பணியாளர்களின் கொடுப்பனவு விகிதம் மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று குறிப்பிடுகிறது.
இதைத் தொடர்ந்து, பணிபுரிபவர்களின் கைக்கு வரும் சம்பளத்தொகை (salary) அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம், ஏனெனில் வரைவு விதிகளின்படி, நிறுவனங்கள் தங்கள் சம்பள முறைமையை மறுசீரமைக்க வேண்டும்.
பணியாளர்களின் கொடுப்பனவு விகிதம் மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என வரைவு விதிகள் அறிவுறுத்துகிறது. இதனால், நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் சம்பளத்தின் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளமாக மாற்றவேண்டும். அந்த சூழ்நிலையில், பணியாளர்களின் பணிக்கொடை மற்றும் Gratuity) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF)
பங்களிப்பு அதிகரிக்கும்.
Also Read | ₹44,900 சம்பளத்தில் வேலை வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
எனவே கவலைப்படத் தேவையில்லை, பிடித்தங்களுக்கு பிறகு கைக்கு வரும் சம்பளம் குறையும். ஆனால் குறையும் ஊதியம் ஊழியர்களின் கணக்கில் வேறொரு விதத்தில் சேமிப்பாக மாறும்.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நவம்பர் 13 அன்று சமூக பாதுகாப்பு விதிகள், 2020 இன் கீழ் வரைவு விதிகளை அறிவித்தது, வரைவு விதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் பரிந்துரைகளை கொடுக்குமாறு கோரியிருந்தது.
சமூக பாதுகாப்பு (social security) தொடர்பான திட்டம் 2020 என்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் மாநில காப்பீடு, பணிக்கொடை மகப்பேறு நன்மை, சமூக பாதுகாப்பு தொடர்புடையது. கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பாக சமூக பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக பாதுகாப்பு திட்டம் 2020 வழங்குகிறது.
Also Read | Indian digital innovations: பில்கேட்ஸின் பாராட்டு மழை
ஊதியங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு ஊதியக் குறியீடு மசோதாவை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சமூக பாதுகாப்பு தொடர்பான திட்டம் 2020 என்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் மாநில காப்பீடு, பணிக்கொடை மகப்பேறு நன்மை, சமூக பாதுகாப்பு தொடர்புடையது.
கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பாக சமூக பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக பாதுகாப்பு திட்டம் 2020 வழங்குகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR