பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் வங்கியில் சம்பளம் வராதா?

பான் எண்ணுடன் நீங்கள் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பான் எண் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை கொண்டே அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. முறைகேடுகளை தடுக்கவும், வரி வருவாயை அதிகரிக்கவும் இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இந்த இணைப்பை முடித்திருந்தாலும், காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் பெருமளவில் இன்னும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: வருகிறது டிஏ ஹைக்.. இந்த நாளில் வரும் அறிவிப்பு
இதனால் அவர்கள் சில பின்விளைவுகளை இனி சந்திக்க நேரிடும். குறிப்பாக மாத சம்பளம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தப்படுவது கூட நிறுத்தி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் வங்கிகளுக்கும் பான் - ஆதார் இணைப்பு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதால் அவை பான் மற்றும் ஆதார் இணைப்பு செய்யாதவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய விளக்கம் கேட்கும். இதனால் உங்களின் நிதிப் பரிவர்த்தனைகள் முழுமையடைவதில் தாமதங்களும் எழலாம், ஆனால் சம்பளம் வரவு நிறுத்தி வைக்கப்படாது.
பான் - ஆதார் இணைக்காதவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
- நிதி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் PAN-ன் குறிப்பிடத்தக்க பங்கைக் கருத்தில் கொண்டு, PAN மற்றும் ஆதார் இணைக்காதவர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருக்கிறது.
- அதாவது செயலிழந்த பான் எண் கொண்ட வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைப்பது ஒருபோதும் நிறுத்தி வைக்கப்படாது.
- பான் எண் செயலிழந்தாலும் நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தை வரவு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. வங்கிகளும் இதற்கு கட்டுபாடுகள் விதிக்கவில்லை. ஆனால் பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களுக்கு நீங்கள் பான் எண்ணை அடையாளமாக காட்ட முடியாது.
- அதேநேரத்தில் எப்போதாவது இதில் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்கும்போது பான் எண் தொடர்பாக பிரச்சனை எழுந்தால் அப்போது நீங்கள் உடனடியாக பான் எண் கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் பான் எண்ணை மீண்டும் ஆக்டிவேட் செய்ய அலைய வேண்டியிருக்கும்.
- பான் எண் செயலிழந்திருந்தாலும் ரூ. 1000 செலுத்தி அதனை நீங்கள் உபயோகத்துக்கு கொண்டு வரலாம். இதனை ஒருவர் ஆன்லைன் வழியாகவே செய்து கொள்ள முடியும். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் தாமதமாக பான் - ஆதார் இணைப்பு செய்யும்போது உங்களின் பான் எண் செயல்பாட்டுக்கு வர அதிகபட்சமாக 30 நாட்கள் வரை ஆகும்.
மேலும் படிக்க | ரிலையன்ஸின் இயக்குநர்கள் குழுவில் பெரிய மாற்றம், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ