ரிலையன்ஸ் ஏஜிஎம் 2023: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (Reliance Industries) 46வது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) இன்று நடைபெற்று வருகின்றது. இந்த 46வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி சார்பில் பல பெரிய முக்கிய அறிவிப்புகள் தற்போது ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. இன்றைய கூட்டத்தில் முகேஷ் அம்பானி குழுமத்தின் குழுவில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி தற்போது இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் RIL இன் இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ரெகுலேட்டர் அளித்த தகவலில் இருந்து ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுவில் இருந்து விலகினார் நீதா அம்பானி:
இந்நிலையில் இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, தற்போது நீதா அம்பானி இயக்குநர் குழுவில் இருந்து தானாகவே விலகினார்.
AGM க்கு முன்பாக வாரிய கூட்டம் நடைபெற்றது:
இதனிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள தகவலில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு (AGM) முன்னதாக நடைபெற்றது. அப்போது இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்க ஒப்புதல் அளித்தது என்று கூறப்பட்டுள்ளது.
வாரிசு கைகளுக்கு நிர்வாக தலைமை:
இந்த நிலையில் முறையாக நிர்வாக தலைமையை படிப்படியாக வாரிசு கைகளுக்கு கொடுக்கும் பொருட்டு 46வது வருடாந்திர கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்ஐஎல் இயக்குநர்கள் குழு, திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மனித வளங்கள், நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஈஷா அம்பானியின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பங்குதாரர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக உள்ளனர். பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அவர்களின் நியமனம் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
நீதா அம்பானி ராஜினாமா செய்தார்:
இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி, முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளாகவும், தற்போது அவருக்கு பதிலாக இஷா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை இயக்குநர் குழுவில் நியமிக்க RIL வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் குழுவில் இருந்து நீதா அம்பானி விலகுவார். இருப்பினும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.
இப்படித்தான் வியாபாரம் பிரிக்கப்பட்டது:
கடந்த ஆண்டு, மூத்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 66, தனது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நாட்டின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்டின் தலைவராக வருவதற்கு வழிவகை செய்தார். இருப்பினும், அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்களின் தலைவராக இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் இதன் கீழ் வருகிறது. ஆகாஷின் இரட்டை சகோதரியான இஷா, 31, ரிலையன்ஸின் சில்லறை விற்பனை பிரிவுக்கும், இளைய மகன் ஆனந்த் புதிய ஆற்றல் வணிகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பார்ச்சூன் பட்டியலில் ரிலையன்ஸ் 88வது இடத்தில் உள்ளது:
தற்போது, 2023 ஆம் ஆண்டின் பார்ச்சூன் பட்டியலில் ரிலையன்ஸ் 88வது இடத்தில் உள்ளது. இது "உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின்" உலகளாவிய 500 பட்டியல் ஆகும். ரிலையன்ஸ் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமாக உள்ளது. இது தவிர, நிறுவனம் ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியலில் 45 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனுடன், "உலகின் மிகப்பெரிய பொது நிறுவனங்கள்" பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மொபைல் விலைக்கு ஜியோபுக் லேப்டாப்.. வாங்குவது எப்படி? முழு விபரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ