7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) விகிதங்களை மோடி அரசு விரைவில் 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது. அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் விகித உயர்வு குறித்த முடிவு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 2023 இல் அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் அறிக்கைகள் பரிந்துரைத்துள்ளன. ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையின்படி, அகவிலைப்படி (DA) 3% அதிகரித்து 45% ஆக உயரும். டிஏ உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
“ஜூன் 2023க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளி உயர்வை நாங்கள் கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும். தசம புள்ளிக்கு அப்பால் டிஏவை அரசாங்கம் உயர்த்துவதில்லை. இதனால் DA மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று சமீபத்தில் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் ஏன் அளிக்கப்படுகின்றது?
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் / ஓய்வூதியத்தின் மதிப்பில் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு நிவாரண நடவடிக்கையாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை வழங்குகிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த சூத்திரத்தின்படி DA/DR உயர்வு அறிவிக்கப்பட்டுகிறது.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எத்தனை ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும்?
தற்போது, 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த சுற்று DA/DR உயர்வால் பயனடைவார்கள். இதற்கு முன்னர், மார்ச் 2023 இல் ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) மர்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு மொத்த அகவிலைப்படி 38% இலிருந்து 42% ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த உயர்வு, அறிவிக்கப்படும் போது, இந்த விகிதம் 45% ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
4 சதவிகித அதிகரிப்பு சாத்தியம்
அகவிலைப்படி (DA) என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) மாதாந்திர எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலை 2023 முதல் பொருந்தும் அகவிலைப்படியின் எண்ணிக்கை ஜனவரி முதல் ஜூன் வரை AICPI குறியீட்டால் தீர்மானிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கான எண்களின் போக்கைப் பார்த்தால், அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி. இதற்கான கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 3 சதவிகிதம் அதிகரிப்பு என்ற பேச்சு தவறாகவே தெரிகிறது. இருப்பினும், இறுதி முடிவு அரசிடம் உள்ளது. ஆனால், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரை, இது குறித்து எதையும் தெளிவாக கூற முடியாது.
செப்டம்பரில் டிஏ மற்றும் டிஆர் உயர்த்தப்பட்டால், ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட விகிதங்கள் அமல்படுத்தப்படும். முதலாவதாக, நிதியமைச்சகத்தின் செலவினத் துறையானது, வருவாய் தாக்கங்களுடன் DA அதிகரிப்பதற்கான முன்மொழிவைத் தயாரிக்கும். அதன் பிறகு, இந்த திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ