புதுடில்லி: புத்திசாலித்தனமாக தேர்வு செய்யப்படும் சில முதலீட்டு திட்டங்கள் நீண்ட கால நன்மைகளைத் தரும். பாரம்பரிய வழியில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் நீண்ட கால இலக்குகளை மனதில் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு பாரம்பரிய முதலீட்டு விருப்பம்தான் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டங்கள் எப்போதும் பயனளிக்கக்கூடியவை. பாரம்பரிய முதலீட்டு வழிகளில் அதிக பணம் ஈட்ட விரும்புவோருக்கு இவை ஒரு சிறந்த வழியாகும். தபால் அலுவலகத் திட்டம் (Post Office Schemes) அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படுவதால், அவை ஆபத்துகள் இல்லாத முதலீட்டு திட்டங்களில் பணம் போட நினைக்கும் முதலீட்டாளர்களுக்கும், தங்கள் முதலீட்டில் உறுதியான வருமானத்தை ஈட்ட நினைக்கும் நபர்களுக்கும் நன்மை பயக்கும்.


கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். இது முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.


ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!


Kisan Vikas Patra-வின் முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதங்கள்


ஏப்ரல் 01 முதல், முதலீட்டாளர்களுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீத வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. கிசான் விகாஸ் பத்ராவில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் (10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்) இரட்டிப்பாகும்.


Kisan Vikas Patra-வின் கணக்கு வரம்பு


இதில் குறைந்தபட்சம் ரூ .1000 முதலீடு செய்ய வேண்டும். கிசான் விகாஸ் பத்ராவில் (Kisan Vikas Patra) முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.


Kisan Vikas Patra சான்றிதழை இவர்கள் பெறலாம்:


(i) ஒரு தனி நபர்


(ii) ஜாயிண்ட் A அகௌண்ட் (அதிகபட்சம் 3 பெரியவர்கள்)


(ii) ஜாயிண்ட் B அகௌண்ட் (அதிகபட்சம் 3 பெரியவர்கள்)


(iv) 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்


(i) மைனர் சார்பாக ஒரு பெரியவர்.


(ii) மனநிலை சரியில்லாத நபரின் சார்பாக ஒரு பாதுகாவலர்


கிசான் விகாஸ் பத்ரா பாஸ்புக் வடிவத்தில் வெளியிடப்படுகிறது. இதை எந்த தபால் துறை அலுவலகத்திலும் வாங்கலாம். நியமன வசதியும் இதில் கிடைக்கிறது. KVP சான்றிதழை ஒருவரிடமிருந்து மற்றவருக்கோ அல்லது ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கோ மாற்ற முடியும். சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 & 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு இதை என்கேஷ் செய்து கொள்ளலாம், அதாவது பணமாக மாற்றிக்கொள்ளலாம். 


ALSO READ: தபால் அலுவலகத்தின் 7 சூப்பர்ஹிட் திட்டங்கள்... இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR